இன்றைய இராசி பலன் – 07.12.2018

இன்றைய இராசி பலன் – 07.12.2018 (வெள்ளிக்கிழமை)

மேஷம்

உண்மை எதுவென்று ஆராயாமல் எந்த முடிவுக்கும் வராதீர்கள். உங்களுக்கென்று உள்ள நட்பு வட்டாரம் உங்களை நேசிக்கும். உணர்வுகளை கட்டுப்படுத்த பழகிக் கொள்ளுங்கள். குடும்பத்திற்கு சற்று முக்கியத்துவம் கொடுங்கள். உங்கள் முடிவே இறுதியானதாக இருக்கட்டும்.

ரிஷபம் 

சில விஷயங்களில், சில நபர்களுக்காக நீங்கள் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளநேரிடும் என்பதை எச்சரிக்கையோடு தெரிந்து வைத்திருங்கள். எனவே, அதிலிருந்து தப்பிக்க எது சிறந்த வழி என்பதை யோசியுங்கள்.

மிதுனம்

உங்கள் உடல்நலனில் மிகுந்த அக்கறையோடு இருக்க வேண்டிய நாள் இது. இதனால் செலவுகள் அதிகரிக்கும். சாலையில் நடந்து செல்வதை விட, பறந்து செல்ல வாய்ப்புள்ளதா? என்று எண்ணும் அளவிற்கு பிஸியாக இருப்பீர்கள். பணவரவுமிக்க நாள்.

கடகம் 

நேர்மையாக நடந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். அதற்கான பிரதிபலனை உங்கள் பணியிடத்தில் காண்பீர்கள். சம்பள பாக்கி வந்து சேரும். பழைய நண்பர்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்.

சிம்மம் 

நீங்கள் மீதம் வைத்திருக்கும் பணிகள் உங்களை துரத்திக் கொண்டே இருக்கும். இதனால், உங்கள் நிம்மதி கெடும். என்றாவது ஒருநாள் அந்தப் பணிகளை நீங்கள் நிறைவேற்றியே ஆக வேண்டும். ஆகையால், அதை விரைவில் துவக்குவது நல்லது. சுமாரான நாள் இது.

கன்னி 

வெற்றியும், தோல்வியும் மாறி மாறி உங்களை நேசிக்கும். அதில் இன்பமாய் கரைந்து போகும் பக்குவம் உங்களிடம் இருக்கும். மற்றவர்களை எளிதில் நம்பும் குணத்தை மாற்றும்வரை நிறைய இழப்புகளை சந்தித்துக் கொண்டே இருப்பீர்கள்.

துலாம் 

பணவரவு சிறப்பாக இருக்கும். முடிந்த அளவு கடனை அடைப்பீர்கள். இதனால், மனதளவில் மகிழ்ச்சியாக உணர்வீர்கள். சொந்தங்களின் ஆதரவு இனிமேல் கிடைக்கும். ஆனால், பொறுப்பை மேலும் அதிகரித்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு.

விருச்சிகம் 

உணவுக் கட்டுப்பாடு அவசியம். என்ன செய்துவிடப் போகிறது என்ற மேம்போக்கான எண்ணமே உங்களது எதிரி. அதை வீழ்த்திவிட்டால், உங்களை யாராலும் வீழ்த்த முடியாது. அன்பான வார்த்தைகளை மட்டுமே விரும்புவீர்கள்.

தனுசு

வீண் வம்புகளை இழுத்துக் கொள்ள வேண்டாம். ஒதுங்கிச் செல்வது உங்களுக்கு நல்லது. நண்பர்களுக்காக செலவிடும் நேரத்தில் கொஞ்சமாவது உங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செலவிடுங்கள். முன்னேற்றம் காண்பீர்கள்.

மகரம்

ராஜ வாழ்க்கை வாழ நினைப்பதில் தவறில்லை. ஆனால், அதற்கான முயற்சியும், உழைப்பும் தேவை. எதுவுமே இல்லாமல் கனவுலகில் வாழ்ந்தால், அவமானமே மிஞ்சும். நேர்மையாக நடந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

கும்பம் 

உண்மையில் வெற்றிகரமான நாள் இது. பணியிடத்தில் மன நிம்மதி இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அரசியலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான நாள் இது.

மீனம் 

தெய்வ வழிபாட்டை கடைபிடியுங்கள். குறிப்பாக, விநாயகர் வழிபாடு உங்கள் வாழ்கையை மேம்படுத்தும். திருமணம் ஆகாமல் இருந்தவர்களுக்கு நல்ல செய்தி கிட்ட வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *