ஜனாதிபதி பதவியை இராஜிநாமா செய்துவிட்டு விவசாயம் செய்யப் போகின்றாராம் மைத்திரி!

ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின்போது, “என்னை அதிகம் நெருக்கடிக்கு உள்ளாக்கினால், எனது ஜனாதிபதி பதவியை இராஜிநாமா செய்துவிட்டு, எனது பொலனறுவை விவசாய பண்ணைக்கு விவசாயம் செய்யச் சென்று விடுவேன்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ ‘டுவிட்டர்’ தளத்தில் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் எம்.பி. இன்று தெரிவித்துள்ளார்.

“இந்தக் கருத்தை ஜனாதிபதி கூறியபோது, அந்தக் கலந்துரையாடலில் என்னுடன் எம்.பிக்களான சஜித் பிரேமதாஸ, ராஜித சேனாரத்ன, லக்ஷ்மன் கிரியெல்ல, ரிஷாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம், பழனி திகாம்பரம், கபீர் ஹாசீம், ரவி கருணாநாயக்க, அகிலவிராஜ் காரியவசம், மலிக் சமரவிகிரம, கயந்த கருணாதிலக, அர்ஜுன ரணதுங்க ஆகியோரும் இருந்தார்கள்” என்று மனோ கணேசன் மேலும் கூறியுள்ளார். .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *