இவ்வருடம் 220 இலங்கைப் பணியாளர்கள் வௌிநாடுகளில் மரணம்! அவர்களுள் 31 பேர் தற்கொலை!! – வெளிவந்தது அதிர்ச்சித் தகவல்

வெளிநாடுகளில் இவ்வருடம் இதுவரையான காலப் பகுதியில் இலங்கைப் பணியாளர்கள் 220 பேர் வரையில் வெவ்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர் என்று வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கூறியுள்ளது.

அதில் 52 பெண்கள் உள்ளடங்குகின்றனர் என்று அந்தப் பணியகத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

உயிரிழந்தவர்களில் 145 பேர் இயற்கை காரணங்களால் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தற்கொலை செய்து கொண்டவர்களில் 06 பெண்களும், 25 ஆண்களும் அடங்குகின்றனர் என்று வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

வீதி விபத்து காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

சவூதி, கட்டார் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் பணியாற்றுகின்ற இலங்கையர்களே அதிகமாக உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டு வருவதற்காக 07 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது எனவும் வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *