இலங்கையில் ‘7 ஸ்டார்’ கோதுமை மாவினை அறிமுகம் செய்து பத்து வருடங்களை கொண்டாடும் செரன்டிப் மா ஆலைகள்

இலங்கை சந்தையில் தமது ‘7 ஸ்டார்’ கோதுமை மா உற்பத்திகள் அறிமுகப்படுத்தப்பட்டு 10 வருடங்கள் நிறைவு பெறுவதனை டுபாயை தலைமையகமாகக் கொண்ட செரன்டிப் மா ஆலைகள் கொண்டாடியது.

நாடெங்கிலும் உள்ள பேக்கரிகள், ஹோட்டல்கள், உணவு விடுதிகள், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஊட்டச்சத்துமிக்க மற்றும் பல்வகையான மா உற்பத்திகளை வழங்குவதில் அர்ப்பணிப்புள்ள தயாரிப்பாக இது இருக்கின்றது.

நிகரில்லா தரம், வினைத்திறன் மிக்க மற்றும் பல்திறன் கொண்ட குழுவினை கட்டியெழுப்பல், மற்றும் நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த செயற்பாடுகளை முன்னெடுத்தல் போன்ற எமது தற்போதைய உறுதிமொழிகளுடன், துறைசார்ந்த நியமங்கள் மற்றும் உலகத் தரமான உற்பத்திகளை பின்பற்றி ‘7 ஸ்டார்’ கோதுமை மாவினை தயாரிக்கின்றது.

தமது செயற்பாடுகளின் மையமாக மக்கள் இருப்பதனை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளையும் நிறுவனம் எடுத்துள்ளது.தற்போது 340 பேர் உள்ளடங்கிய தொழில்சார் வல்லுனர்களை கொண்ட அணியை கொண்டிருக்கின்றது. அவர்களில் 81 உறுப்பினர்கள் பத்து வருட சேவையையும், 91 பேர் ஐந்து வருடத்திற்கு மேற்பட்ட சேவையையும் நிறைவு செய்துள்ளனர்.

ஊழியர்களை தக்கவைத்துக் கொள்ளும் மூலோபாயத்தின் ஒரு கட்டமாக, உள்ளடக்கமான, ஆதரவான வேலைச் சூழல் ஒன்றை உருவாக்குவதற்கு ளுகுஆடு அர்ப்பணிப்புடன் உள்ளது. தமது நேரம், பணி மற்றும் சேவைகளில் பொறுப்பினை ஏற்று செயற்படுவதற்கு ஊழியர்களை அது ஊக்குவிக்கின்றது. இதன் காரணமாக ‘7 ஸ்டார்’ உற்பத்திகள் குழுவில் பணியாற்றும் அணியானது ஊக்கமளிக்கப்பட்ட, அர்ப்பணிப்புடனான ஊழியர்களால் நிறைந்திருக்கின்றது.

நிறுவனத்தின் மைல்கல்லான பத்து வருட நிறைவு குறித்து கருத்து தெரிவித்த, SFMLஇன் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் ரியால்

“அனைத்து வீடுகளிலும் பிரதான உணவுத் தெரிவாக ‘7 ஸ்டார்’ மா வகைகள் மாறியுள்ளமையை பார்ப்பதற்கு நாம் உண்மையில் பெருமை கொள்கின்றோம். தேசம் முழுவதிற்கும் நம்பகமான மூலப்பொருளாhக அது இருக்கின்றது. பத்து வருட நிறைவை கொண்டாடுவதற்கு நாம் பெருமை கொள்கின்றோம்.

எமது பெறுமதிமிக்க வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு இந்த வெற்றி வரலாற்றில் அங்கமாய் இருந்தமைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். சந்தையில் எமது இடத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு நாம் எதிர்பார்த்திருக்கின்றோம். எமது ‘7 ஸ்டார்’ உற்பத்திகள், எமது செயற்பாடுகளுக்கான உறுதியான தளத்தை தந்திருக்கின்றன. நாடு முழுவதிலும் சிறந்த தரத்திலான மா உற்பத்திகளை வாடிக்கையாளர்கள் அணுகச் செய்வதற்கான முயற்சிகளை நாம் எடுப்போம்” என்றார்.

இலங்கையில் நிறுவனத்தின் பயணம் 2008ஆம் ஆண்டு ஆரம்பித்தது. கொழும்பு துறைமுகத்தில் மா அரைக்கும் வசதிகளைக் கொண்ட தொழிற்சாலையானது, இன்று நவீன Swiss Buhler தொழிநுட்பத்தையும், பொறியியலையும் பயன்படுத்தி நாளாந்தம் 1,000 தொன்கள் மாவினை அரைக்கின்றது. ஐந்தாவது தலைமுறை மா ஆலையாளர் மார்க் ஹீலிங் என்பவரின் வழிகாட்டலுடன், பிராந்தியத்தில் விரைவான மற்றும் வினைத்திறன் மிக்க ஆலை செயற்பாடுகளை அமைத்துள்ளது.

உயர் தரங்களுடன் இணைந்ததாக அது உள்ளது. 25 கி.கி., 50கி.கி. அளவில் பேக்கரிகளுக்கான மா, வீட்டுத் தேவைக்கான மா மற்றும் ரொட்டி மா போன்ற தயாரிப்புக்களை நிறுவனம் முதலில் அறிமுகம் செய்தது. அதன் பின்னர் 2012இல் அனைத்து தேவைகளுக்குமான தொகுதி மற்றும் உணவுத் தயாரிப்புக்கான 1 கிலோகிராம் தொகுதிகளை அறிமுகம் செய்தது. 2012இல் ஆட்டா மா, அனைத்து தேவைகளுக்குமான மா, ரவை, மற்றும் உணவு தேவைகளுக்கான மா போன்ற உற்பத்திகளை சில்லறை விலைக்கு பெற்றுக் கொள்ளும் 1 கி.கி பொதிகளில் அறிமுகப்படுத்தியது.

காலப்போக்கில், தமது பெருநிறுவன அடையாளத்தை வலுப்படுத்தும் முயற்சிகளை நிறுவனம் முன்னெடுத்ததுடன், அதன்விளைவாக பல்வேறு விருதுகளையும் வென்றெடுத்தது. வருடத்திற்கு வருடம் தமது வளர்ச்சியை எட்டிய நிறுவனமானது, தொடர்ந்து தமது வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தமது உற்பத்தி எல்லைகளை விரிவுபடுத்தி துறையில் முன்னணி இடத்தை ளுகுஆடு பெற்றுள்ளது. துறைசார்ந்த வல்லுனர்களை உள்ளடக்கிய அணியானது, கடந்த வருடங்களில் நிறுவனத்தின் வளர்ச்சியை உறுதி செய்து, கோதுமை மா உற்பத்தி துறையில் நிறுவனத்தை முன்னிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

தமது அணிக்கு அப்பாலும்; அர்ப்பணிப்பு உள்ளது. விநியோகஸ்தர்களுடன் சிறந்த மற்றும் அர்த்தமுள்ள உறவினை நிறுவனம் கட்டியெழுப்பியுள்ளது. தற்போது சந்தையில் நூறிற்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களும்,‘7 ஸ்டார்’ உற்பத்திகளின் நேரடி விற்பனையாளர்களும் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பத்து வருடங்களுக்கு முன்னர் எமது பயணம் ஆரம்பித்தது முதல் எம்முடன் உள்ளனர். விநியோகஸ்தர்களுடன் ளுகுஆடு கொண்டுள்ள நெருக்கமான உறவானது, சந்தை நிலைமைகளுக்கு ஏற்பச் செயற்படுவதற்கும், வாடிக்கையாளர்களின் தேவைகளை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதற்கும் உதவுகின்றது.

பல்வேறு பெருநிறுவன பொறுப்பு நிகழ்ச்சிகளையும், தொழிற்பயிற்சி கல்வி நிகழ்ச்சிகளையும் ஆதரவளிப்பதன் மூலம் உள்ளுர் சமுதாயத்திற்கு மீள வழங்கல் மற்றும் மேம்படுத்தலுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை ளுகுஆடு வழங்கியுள்ளது. ஆரோக்கியமான மா உற்பத்திகள் உள்ளடங்கலாக 12 வகையான கோதுமை மாவினை ளுகுஆடுஆனது இன்று சந்தையில் விற்பனை செய்கின்றது. தூய்மை, புத்தாக்கம், தரம், புதுமை, நிபுணத்துவம் மற்றும் நம்பிக்கை என்ற விழுமியங்களால் கட்டியெழுப்பப்பட்ட ‘7 ஸ்டார்’ தயாரிப்புக்கள்,நாடு முழுவதிலும், அனைத்து வாழ்க்கை மட்டங்களைக் கொண்டவர்களதும் ஊட்டச்சத்து தேவைகளை நிறைவு செய்யும் உற்பத்தியாக உள்ளது.

இலங்கையில் முன்னணி மா ஆலைகளில் ஒன்றாக செரன்டிப் மா ஆலைகள் உள்ளன. Al Ghurair Foods (AGF)kw;Wk; Emirates Trading Agency (ETA இன் இணைச் செயற்பாடாக அது உள்ளது. பத்து வருடங்களுக்காக தேசத்திற்கு ஊட்டச்சத்தளிக்கும் மா தெரிவாக ‘7 ஸ்டார்’ உற்பத்திகள் திகழ்கின்றன. தூய்மை, புத்தாக்கம், தரம், புதமை, நிபுணத்துவம், சேவை மற்றும் நம்பிக்கை என்பவற்றை உள்ளடக்கியிருக்கின்றது.

இலங்கையில் முன்னணி மா உற்பத்தியாளராக வருவதற்கு நிறுவனம் அர்ப்பணிப்புடன் உள்ளது. சர்வதேச சந்தையில் தெரிவுக்குரிய மா ஆலையாளராகவும் உள்ளது. 26 மே 2008 அன்று கொழும்புத் துறைமுகத்தில் மா ஆலை வசதியுடன் SFML தமது செயற்பாடுகளை ஆரம்பித்தது.

‘ISO 9001:2008, ISO 14001:2004, BS OHSAS 18001:2007, ISO 22000:2005 தேவைகளின் அடிப்படையில் ஒன்றிணைக்கப்பட்ட முகாமைத்துவ முறையை நிறுவனம் தயாரித்து, நடைமுறைப்படுத்தியுள்ளது. ளுடுளு சான்றிதழ் பெற்ற ஒரே கோதுமை மா உற்பத்தியாக உள்ளது. பிரயோகிக்கப்படக் கூடிய சட்டங்கள், ஒழுங்குவிதிகள், சர்வதேச தரங்கள் மற்றும் கோவைகள், மற்றும் தரம், சுற்றுச்சூழல், தொழில்சார் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு பொன்ற  சிறந்த உற்பத்தி பயிற்சிகள் போன்றவற்றை பின்பற்றியதாக நிறுவனம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *