பரபரப்புக்கு மத்தியில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம் – புறக்கணிக்கிறது மஹிந்த அணி!

பெரும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் நாடாளுமன்றம் நாளை புதன்கிழமை முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

பிரதமர் பதவியை வகித்த மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நாளை மீண்டும் இலத்திரனியல் வாக்கெடுப்புமூலம் உறுதிப்படுத்தப்படவுள்ளது. அதன்பின்னர் சபைஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதம் இடம்பெறும்.

அதேவேளை, நாளைய சபை அமர்விலும் தமது அணி பங்கேற்காது என்று  மைத்திரி, மஹிந்த கூட்டணி இன்று அறிவித்தது.

” நாடாளுமன்றத்தில் நாளைய தினமும் போலியானமுறையில் தீர்மானம் நிறைவேற்ற சபாநாயகர் முயற்படுகின்றார் என எமக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே, கட்சிசார்பாக செயற்படும் சபாநாயகர், நீதியாக செயற்படும்வரை சபை அமர்வில் பங்கேற்கமுடியாது” என்று தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துவெளியிடுகையிலேயே அவர் இத்தகவலை வெளியிட்டார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *