சு.கவின் மகளிர் அணி தலைவியாகிறார் மைத்திரியின் மகள் !

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மகளிர் அணித் தலைவியாக சத்துரிக்கா சிறிசேன நியமிக்கப்படவுள்ளார் என்றும், இதுகுறித்தான் அறிவிப்பு 4 ஆம் திகதி விடுக்கப்படும் என்றும் தெரியவருகின்றது.

தந்தை மன்னரானால், அவரின்  மகன் இளவரசராகவும், மகள் இளவரசியாகவும் வலம்வருவது மன்னர்காலம். காலப்போக்கில் அந்த நடைமுறை மாறியது. பல நாடுகள் ‘வாரிசு’ அரசியலுக்கு சாவுமணி அடித்து சமாதி கட்டின.

ஆனால், இலங்கைபோன்ற நாடுகளில் மன்னர் ஆட்சி இல்லாவிட்டாலும், குடும்ப ஆட்சி, வாரிசு அரசியல் என்பது தொடர்ந்தும் நீடித்துவருகின்றது. மஹிந்தவின் ஆட்சிகாலத்தில் அவரது குடும்ப உறுப்பினர்களே சர்வ பலமும் படைத்தவர்களாக விளங்கினர். மகன்மார் ராஜகுமாரர்களாகவே வலம்வந்தனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளான சத்துரிக்கா சிறிசேனவும் விரைவில் கன்னி அரசியல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார். மாகாணசபை அல்லது பொதுத்தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தடல்புடலாக இடம்பெற்றுவருகின்றது.

உலகின் முதல் பெண்பிரதமரையும், ஜனாதிபதியையும் தெரிவுசெய்தது இலங்கைதான். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியே அதற்குரிய வாய்ப்பை வழங்கியிருந்து. அக்கட்சியின் மகளிர் பிரிவானது பலம்மிக்க படையணியாகும். திறமைமிக்கவர்களே அப்பிரிவின் தலைவியாக நியமிக்கப்பட்டுவந்தனர்.

எனினும், தற்போது மகளிர் பிரிவை, சந்திரிக்கா சிறிசேனவுக்கு வழங்குவதற்குரிய ஏற்பாடுகளும் திரைமறைவில் அரங்கேறிவருவதாக கதைஅடிபடுகின்றது. 4 ஆம் திகதி இது குறித்தான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *