சாவகச்சேரியில் இ.போ.ச. பஸ் மீது மர்மநபர்கள் இன்று கல்வீச்சு தாக்கு! – பொலிஸ் கான்ஸ்டபிள் காயம்

கதிர்காமத்திலிருந்து அநுராதபுரம் ஊடாக யாழ்ப்பாணம் வரை பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸின் மீது இன்று அதிகாலை சாவகச்சேரி – நுணாவில் பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளபட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தின்போது, சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திலிருந்து கடமை முடிந்து வீடு நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்து, சாவகச்​சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை.

இது தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *