இலங்கையில் 10 மாதங்களில் 310 பேருக்கு எயிட்ஸ்!

2018 இல் கடந்துள்ள 10 மாதங்களில் மாத்திரம் 310 பேர், எச்.ஐ.வி. தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் என்று தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் எச்.ஐ.வி. தொற்றுக்கு இலக்கானோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2017 ஆம் ஆண்டில்285 பேர் மாத்திரமே எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

பல்வேறு நோய்களால் தாக்கப்பட்ட ஒருவருக்கு, அவருடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கியிருப்பதை மருத்துவ பரிசோதனை உறுதி செய்யும் பரிதாபகரமான நிலைதான் எய்ட்ஸ்.
இது மனிதர்களின் இயற்கையான நோய் எதிர்ப்புத் தன்மையில் நிரந்தரப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மனித உயிருக்கு எமனாக வரும் இந்த அபாயகரமான நோய் முதன் முதலில் 1981-ம் ஆண்டில் (டிசம்பர்) கண்டறியப்பட்டது.
1983-ல் பாரிஸ் நாட்டை சேர்ந்த லுக் மாண்டேக்னியர் என்ற ஆய்வாளரும் மற்றும் அமெரிக்காவில் உள்ள ராபர்ட் கேலோ என்ற ஆய்வாளரும் எய்ட்ஸ் நோய்க்குரிய வைரசினை தனித்தனியாகக் கண்டறிந்தனர். 1986-ல் இந்த வைரசுக்கு மனிதன் முயன்று பெற்ற நோய் என்றும் எதிர்ப்பாற்றல் தேய்வு என்றும் பெயரிட்டனர்.
எச்.ஐ.வி தொற்று கிருமிகள் உள்ளவர்களுடன் பாதுகாப்பற்ற முறையில் உடல் உறவு கொண்டால் அவர்களுக்கு எய்ட்ஸ் நோய் தொற்றி விடுகிறது. 80 சதவீதம் பேருக்கு எய்ட்ஸ் நோய் வர இதுவே காரணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *