கொமர்ஷல் வங்கியின் POS விற்பனைப்புள்ளி!

இலங்கையின் நவீன பொருள் கொள்வனவு மையமான கொழும்பு சிற்றி சென்டரில் உள்ள விற்பனை நிலையங்கள் இலங்கையின் தனிப்பெரும் தனியார் வங்கியான கொமர்ஷல் வங்கியின் விற்பனைப் புள்ளி இயந்திரங்களால் (POS) வலுவூட்டப்பட்டுள்ளன.

ஸ்டூடியோ, அபான்ஸ் எலைட், மெக் டொனால்ட்ஸ், லிவிங் கலர்ஸ், அபான்ஸ் எப்பள்1, நேச்சர்ஸ் பியுட்டி கிரியேஷன்ஸ் என்பன உட்பட சுமார் 50 விற்பனை நிலையங்களுக்கு கொமர்ஷல் வங்கியின் POS இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக வங்கி அறிவித்துள்ளது.

இதன் காரணமாக கொமர்ஷல் வங்கியின் கிரடிட் மற்றும் டெபிட் கார்ட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு சிற்றி சென்டரில் பொருள்களை கொள்வனவு செய்கின்ற போது எண்ணற்ற நன்மைகள் கிடைக்கவுள்ளன.

இலகு கொடுப்பனவு திட்டம், கொம்டீல்ஸ் கழிவுகள், வருடம் முழுவதும் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் வெவ்வேறு கழிவுகள் என்பனவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும். அவர்கள் தங்களது கொள்வனவுகளுக்கான கொடுப்பனவுகளைச் செய்கின்ற போது மெக் லோயல்டி வெகுமதிப் புள்ளிகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.

இவற்றுக்கு மேலதிகமாக சீனா ஸ்ட்ரீட் புட், ப்ரஷ் இன்டென்ஷன் பை ரூட்ஸ், கிரப் சிங்கப்பூர், ஐஸல் ஒப் கிளேட்டோ, ஜெக்ரோ, மிதா சிஸ்டர்ஸ், ஒக்ரா கிச்சன், பன்ச், டீபெயாரர், த லிட்டில் பிரின்ஸ், மெங்கோ ட்ரீ, டோக்யோ ஷொகுடோ, ஷியோக், அன்டரியம் புட் ஸ்டூடியோவின் சுமாட்ரான் ஸ்பைஸ் டெஸ்ட்டூரண்ட் என்பனவற்றில் கிரடிட் கார்ட்டுகளுக்கு 20 வீத கழிவையும் டெபிட் கார்ட்டுகளுக்கு 10 வீத கழிவையும் 2018 டிசம்பர் 20 வரையான காலப்பகுதியில் வார நாற்களில் பெற்றுக் கொள்ள முடியும் என வங்கி அறிவித்துள்ளது.

கொமர்ஷல் வங்கி டெபிட் கார்ட் வருடாந்தம் பல்வேறு சேவைகளை வழங்கும் ஊக்குவிப்புக்களை உள்ளடக்கி உள்ளது. தனது மெக்ஸ் லோயல்டி வெகுமதித் திட்டம் மூலம் கிரடிட் மற்றும் டெபிட் கார்ட் ஆகிய இரண்டுக்கும் வெகுமதிகளை வழங்கும் முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி திகழ்கின்றது. அதேபோல் வழமையாக கிரடிட் கார்ட்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படும் ஊக்குவிப்பு கழிவு சலுகைகளையும் டெபிட் கார்ட்டுகளுக்கும் வங்கி விஸ்தரித்துள்ளது.

கொமர்ஷல் வங்கி அட்டைகள் இலங்கையில் பாவனையில் மிக வேகமான வளர்ச்சி கண்டு வரும் அட்டைகளாகும். விற்பனைப் புள்ளி பாவனையில் வங்கியின் கிரடிட் மற்றும் டெபிட் கார்ட்டுகள் தான் சந்தையில் தலைமை நிலையிலும் உள்ளன.

வெள்ளி தங்கம் பிளேட்டினம் என பல பிரிவுகளில் விஸா, மாஸ்டர் கார்ட், விஸா சிக்னேச்சர், வேர்ள்ட் மாஸ்டர் கார்ட் மற்றும் விஸா பிரீமியர் பிரிவில் விஸா இன்பினிட் கார்ட் என பல்வகை கார்ட்டுகளை வங்கி வழங்குகின்றது. இவை அனைத்தும் ‘டெப் அன்ட் கோ’ NFC தொழில்நுட்பம் கொண்டவை. மிக உறுதியான Nகுஊ விற்பனைப் புள்ளி (POS) வலையமைப்பையும் இவை கொண்டுள்ளன.

தொடர்ந்து எட்டு வருடங்களாக உலகின் தலைசிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் இடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கி நாடு முழுவதும் 263 கிளைகளுடனும், 800 யுவுஆ வலையமைப்புக்களுடனும் செயற்படுகின்றது.

வங்கி 2016 மற்றும் 2017ம் ஆண்டு காலப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட உள்ளுர் மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. 2018ன் முதல் எட்டு மாத காலத்தில மட்டும்; 20 சர்வதேச விருதுகளையும் கொமர்ஷல் வங்கி பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *