கால்வாயில் வீழ்ந்தது அதிசொகுசு பஸ்! யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நால்வர் பலி!!

நீர்கொழும்பு – சிலாபம் பிரதான வீதியின் வலஹாபிட்டிய பகுதியில் அதிசொகுசு பஸ் வீதியை விட்டு விலகி எமில்டன் கால்வாயில் வீழ்ந்ததில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்தக் கோர விபத்தில் 20 ​பேர் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி வந்த பஸ்ஸே விபத்துக்குள்ளாகியுள்ளாகியுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் மாரவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தில் உயிர்ழந்தவர்களுள் 3 பெண்களும் அடங்குகின்றார்கள் எனவும், இவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *