பன்றி இறைச்சி ஆபத்தான உணவா?

பன்றி இறைச்சியை உண்பதால், 70 விதமான, சிறிய மற்றும் பெரிய நோய்கள் உண்டாகின்றன என்பது ஒரு அறிவியல் ரீதியான உண்மை.அதில் முக்கிய‌மான சில வ‌கைககளை ம‌ட்டும் இங்கே பார்ப்போம்.

ம‌னித‌ உட‌லில் ஏற்கென‌வே ப‌ல்வ‌கை புழுஇன‌ங்க‌ள் ப‌ல‌ நாட்க‌ளாக‌ விருந்தாளி போல‌ குடியிருந்து வ‌ருகின்ற‌ன என்று ப‌ள்ளி பாட‌ புத்தக‌ங்களிலேயே நாம் ப‌டித்திருக்கிறோம்.

சில‌ புழுக்க‌ள் ந‌ம் உட‌ல் செரிமான‌த்திற்கு ப‌ய‌ன்ப‌டுகின்றன‌ என்ப‌தும் நாம‌றிந்த‌ செய்தியே…”டேனியா சோலிய‌ம்” Taenia solium (pork tapeworm) என்ற‌வொரு புழு, ப‌ன்றி இறைச்சியை உண்ப‌தால் ந‌ம் உண‌வுக்குழ‌லின் அடிபாகத்தில் வாட‌கையின்றி குடியேறி விடுகிறது.

இந்த டேனியா சோலியம் ,அதே பகுதியில் (Ova) தன் முட்டைகளை இடுகிறது. இந்த முட்டைகள் தான் மிகவும் ஆபத்தானவை.இவை மனிதனின் இரத்த நாளங்களில் பயணிப்பதால் அதன் மூலம் எல்லா உறுப்புகளையும் சென்றடைந்து விடுகின்றன.

மனித உடல் உறுப்புகளில் எந்த பகுதிக்கு பரவினாலும் அங்கே ஒரு பாதிப்பை ஏற்படுத்தி விடுமாம்.இத‌ய‌ம்,மூளை,க‌ண்,நுரையீர‌ல் என‌ எல்லா இட‌ங்க‌ளிலும் இந்த டேனியா சோலிய‌த்தின் முட்டைக‌ள் கைவ‌ரிசை காட்டுகின்ற‌ன.

டேனியா சோலியம் என்ற புழுவைப் போன்றே இன்னுமொரு புழு உயிரினம் “ட்ரிசுரா ட்ரிசுராஸிஸ்” (Trichura Tichurasis) பன்றி மாமிசத்தின் மூலம் தான் மனித உடலில் பரவுகிறது.டேனியா சோலியமும் இந்த ட்ரிசுராவும் ஒரே மாதிரியான குணமுள்ள உறவினர்கள் தான்.

ஆனால் இந்த புழுக்களின் முட்டைகள், பன்றி இறைச்சியை நன்கு சமைப்பதால் இறந்து விடுகின்றன என்பது எல்லோர் மத்தியிலும் இருக்கும் “பொதுவான தவறான கருத்து”.அமெரிக்காவில் நடத்தப் பட்ட ஒரு ஆய்வில், ட்ரிசுராஸிஸ் ஆல் பாதிக்கப் பட்ட 24 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டனர்.இதில் 22 பேர் பன்றி மாமிசத்தை நன்கு சமைத்து உண்டவர்கள் தான்.ஆகவே, இந்த புழுக்களின் முட்டையின் சாதாரண் நீரின் (சமையலின் போது) கொதிநிலையில் இறப்பதில்லை.

இதுமட்டுமின்றி பன்றியின் இறைச்சியில் உள்ள மிதமிஞ்சிய கொழுப்பும், ஹார்ட் அட்டாக்,ஹைபர்டென்ஷன் போன்ற‌ பல ஆபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றன.அமெரிக்கா,ஐரோப்பிய கண்டங்களில் வாழும் பாதி விழுக்காடுபேர் “ஹைபர்டென்ஷன்”ஆல் பாதிக்கப் பட்டுள்ளனர் என்ற செய்தி ஆச்சரியப்படுவதிற்கில்லை.
நோய்களுக்கான காரணியாக மட்டுமின்றி, அது ஒரு சுகாதாரமற்ற விலங்கினமாகவே சுற்றி வருகிறது.பண்டைய காலங்களில், நாகரீக லெட்ரீன்கள் இல்லாத காரணங்களால் மனித கழிவை சுத்தம் செய்வதற்காகவே பன்றிகள் பயன்படுத்தப் பட்டன.

ஆனால் இப்போதெல்லாம் மேலை நாடுக‌ளில் ந‌ல்ல‌ சுகாதாரமான சூழ்நிலைகளில் தானே ப‌ன்றிக‌ள் வ‌ள‌ர்க்க‌ப் ப‌டுகின்றன? என்று நீங்க‌ள் கேட்க‌லாம்.சுகாதார‌மான‌ சூழ்நிலைக‌ளில் வ‌ள‌ர்க்க‌ப் பட்டாலும் எல்லா ப‌ன்றிக‌ளையும் ஒரே இட‌த்தில் வைப்ப‌தால், அவை த‌ம் இன‌த்தின் க‌ழிவுக‌ளையே உண்டு ம‌கிழ்கின்ற‌ன.ஆக‌, இது ஒரு சுகாதார‌ சீர்கேட்டிற்கும் வ‌ழிகோலும் என்ப‌தில் ஐய‌மில்லை.

பல்வேறு நூற்றாண்டுகளுக்கு முன் அருளப் பெற்ற இறை வேதங்களில் பன்றி இறைச்சி தடை செய்யப் பட்டுள்ளதன் நோக்கம் நம்மைக் கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது.திருக்குர்-ஆனில் நான்கு இடங்களில் இக்கருத்து வலியுறுத்தப் பட்டுள்ளது.இஸ்லாம் மட்டுமின்றி, கிறிஸ்துவர்களின் வேதமாகிய பைபிளிலும் பன்றி இறைச்சியைப் புசிப்பது தடுக்கப் பட்டுள்ளது.

நன்றி – Farsan Bin Thajoon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *