செலான் வங்கிக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

செலான் வங்கியின் பணிப்பாளர் சபை அங்கத்தவர்களாக கிரிஷான் திலகரட்ன , ரவி அபேசூரிய ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒக்டோபர் 1  மற்றும் 17 ஆம் தினங்களிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அபேசூரிய சுயாதீன பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், திலகரட்ன நிறைவேற்று அதிகாரமற்ற சுயாதீனமற்ற பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

குவைத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பாரிய நிறுவனங்களில் ஒன்றான (4.7 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான சொத்துக்களைக் கொண்டது) நஷனல் இன்டஸ்ரீஸ் குரூப் (Nஐபு) இன் உரிமையாண்மையின் கீழ் காணப்படும் கன்டொர் குரூப்பின் குழும பணிப்பாளராக ரவி அபேசூரிய காணப்படுகிறார்.

முன்னதாக அவர் ஹேலீஸ் குழுமத்தில் மூலோபாய வியாபார அபிவிருத்தி தலைமை அதிகாரியாகவும், அம்பா ரிசேர்ச் லங்காவின் முகாமைத்துவ பணிப்பாளராகவும், ஃபிட்ச் ரேட்டிங்ஸ் லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராகவும் செயலாற்றியிருந்தார்.

200 மில்லியன் டொலர் PE நிதியத்தின் தனியார் முதலீடுகளை பராமரித்து  கொள்வதற்கு ரவி பொறுப்பாக செயலாற்றியிருந்தார். முன்னர் அவர், கன்டொர் குரூப் ஒஃவ் கம்பனிஸ், அம்பா ரிசேர்ச் மற்றும் ஃபிட்ச் ரேட்டிங் ஆகியவற்றை நிறுவுவதில் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார்.

அதற்கு முன்னதாக, JP மோர்கன் நிறுவனத்தின் கூட்டாண்மை நிதியியல் பிரிவின் தலைமைப் பொறுப்பை வகித்திருந்தார். தனியார் முதலீடுகள், உலக வங்கி மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றுக்கு ஆலோசனை வழங்கல் போன்ற சிரேஷ்ட பதவிகளையும் இவர் வகித்துள்ளார்.

பிரித்தானியாவின் சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனத்தின் அங்கத்தவர் என்பதுடன், அமெரிக்காவின் பட்டய நிதிய ஆய்வாளராகவும் திகழ்கிறார். அவுஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகத்திடமிருந்து ஆடீயு பட்டத்தையும் பெற்றுள்ளார்.

கொமர்ஷல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமாக கிரிஷான் திலகரட்ன செயலாற்றி வருவதுடன், LOLC பிஎல்சியின் சிரேஷ்ட முகாமைத்துவ அணியின் அங்கத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கம்போடியாவின் Prasac  நுண் நிதியியல் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையில் அங்கம் வகிப்பதுடன், கொமர்ஷல் இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ் பிரைவட் லிமிட்டெடின் பணிப்பாளர் சபையிலும் அங்கம் வகிக்கிறார்.

இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்தின் பணிப்பாளராக திகழ்வதுடன், வங்கிசாரா நிதிச்சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் செயற்பாடுகளை கண்காணிக்கும் இலங்கை நிதியியல் இல்லங்களின் சம்மேளனத்தின் தலைவராகவும் இயங்குகிறார்.

செலான் வங்கியின் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக நியமிக்கப்படுவதற்கு முன்னதாக திலகரட்ன, 2018 ஆகஸ்ட் 31ஆம் திகதியன்று தமது பதவியை இராஜினாமா செய்யும் வரை செயலாற்றிய ஐ சி நானயக்காரவுக்கு பதிலான மாற்று பணிப்பாளராக செயலாற்றியிருந்தார்.

கிரிஷான் திலகரட்ன

இலங்கையில் வங்கியியலாளர் சம்மேளனத்தில் இணை அங்கத்துவத்தை திலகரட்ன கொண்டுள்ளதுடன், அமெரிக்காவின் ஹாவார்ட் பிஸ்னஸ் ஸ்கூலில், நுண் நிதியியல் பிரிவில் மூலோபாய தலைமைத்துவ பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தையும் பின்பற்றியுள்ளார்.

முகாமைத்துவம், கடன், நாளிகை நிர்வாகம், சந்தைப்படுத்தல், ஃபெக்டரிங், இலாகா முகாமைத்துவம் மற்றும் இஸ்லாமிய நிதியியல் ஆகியவற்றில் 25 வருடங்களுக்கு மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *