39 மனைவிகள், 94 குழந்தைகள் உள்பட 181 குடும்ப உறுப்பினர்கள் கொண்ட உலகின் மிகப்பெரிய குடும்பம்!

உலகின் மிகப் பெரிய குடும்பம் என்ற பெருமையை மிசோரத்தை சேர்ந்த குடும்பம் தக்கவைத்து கொண்டுள்ளது. பேக்டௌங் பகுதியைச் சேர்ந்த Ziona Chana என்பவருக்கு 39 மனைவிகள் உள்ளன. சியோனாவுக்கு 15 வயது இருக்கும் போது முதல் திருமணம் நடந்தது. 1959ம் ஆண்டு தொடங்கிய இந்த திருமண வாழ்க்கை, மணிவிழா கொண்டாடிய 60 வயது வரை நீடித்தது. ஒருசில ஆண்டுகளைத் தவிர ஆண்டுக்கு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். கடைசியாக 2004ல் திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு திருமணம் செய்வதை நிறுத்திக்கொண்டார்.

இவர் இதுவரை 94 குழந்தைகளை பெற்றுள்ளனர். தனது மகன்களுக்கு திருமணம் செய்ததன் மூலம் 14 மருமகள்கள் உள்ளன. அத்துடன் 33 பேரக்குழந்தைகளுடன் ஒரே குடும்பமாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் ஓட்டல் போன்ற 4 அடுக்கு மாடியில் 100 அறைகள் கொண்ட வீட்டில் அனைவரும் ஒற்றுமையாக வசித்து வருவது மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 4 அடுக்கு மாடிங்கள் கொண்ட ஒரே வீட்டில் ஒற்றுமையாக வசித்து வரும் Zionaவின் குடும்பத்தை காண ஏரளாமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *