கொழும்பில் பயங்கரம் – பாதாளகோஷ்டி தலைவர்கள் சுட்டுக்கொலை!

பாதாள  உலகக் குழுவின்  முக்கிய தலைவர்கள்  இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.கொட்டாவ  பொலிஸ்  பிரிவின்  ருக்மல்  வீதியின்  மேம்பாலத்திற்கு  கீழ் நேற்றிரவு (திங்கட்கிழமை) விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட  துப்பாக்கிப் பிரயோகத்திலேயே இவர்கள் கொல்லப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பாதாள  குழுவின்  தலைவர்களான  ஹபரட்ட  வசந்த  மற்றும்  உப்புல்  ஆகியோரே இவ்வாறு   சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

திட்டமிட்ட  குற்றங்கள்  தடுப்புப்  பிரிவுக்கு  கிடைத்த  இரகசிய  தகவலை  அமைவாக  அதன்  விசேட  அதிரடிப்படை  பிரிவு  குறித்த  பகுதிக்கு  சென்றுள்ளது.

இதன்போது  பாதாளகுழு  தலைவர்கள், விசேட  அதிரடிப்படையினர்  மீது  மேற்கொண்ட  தாக்குதலை  தொடர்ந்து  விசேட  அதிரடிப்படையினர் நடத்திய  பதில்  தாக்குதலில்  அவர்கள் உயிரிழந்தனர் என்று பொலிஸ்  ஊடகப் பிரிவு  தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *