மைத்திரி 8 அடி பாய்ந்தால் ரணில் 16 அடி பாய்ந்து தாக்குவார் – ஐ.தே.க. அதிரடி!

” மைத்திரி எட்டுஅடி பாய்வாரானால், ரணில் விக்கிரமசிங்க 16அடி பாய்ந்து தாக்குதல் நடத்துவார். ஆவேசமாக  வேட்டையாடிவதைவிட, மௌனமாக வேட்டையாடுவதே அரசியலுக்கு சிறந்தது. அதை ரணில் செய்வார். அவருக்கு பக்கபலமாக நாம் இருப்போம்.” – என்று ஐ.தே.கவின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கண்டி மணிக் கூண்டுக் கோபுரத்திற்கு முன் இடம் பெற்ற ஐ.தே.க. யின் கூட்டத்திலே இவ்வாறு கூறினார்.

” சட்டவிரோதமானமுறையில் எவ்வித அதிகாரமும் இன்றி தம்மை ஆட்சியாளர்கள் என கூறிக் கொள்ளும் நபர்கள், மக்களுக்காக அன்றி பதவிகளுக்காகவே நாடாளுமன்றத்தில் சண்டையிடுகின்றனர். சபாநாயகர் பக்கச்சார்பாக செயற்படுகின்றார் என்றும், அவர்மீது நம்பிக்கையில்லை என்றும் கொக்கரிக்கின்றனர்.

சபாநாயகர்மீது நம்பிக்கையில்லையென்றால் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைக்கப்பட்டும். அதை மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நாம் தோற்கடிப்போம். இந்த சவாலை ஏற்பதற்கு மஹிந்த அணி தயாரா?

கடந்த அக்டோபர் மாதம் 26 ம் திகதி முதல் இன்றுவரை  அரசியல் களத்தில் இடம் பெற்றவை அனைத்தும் நாடகங்களாகும். பாராளுமன்றத்திலும் நாடகம் ஆடுகின்றனர்.

கட்சியின் தலைவரும் கட்சியும் ஒரு அடி முன் எடுத்துவைக்க எனக்கு சந்தர்ப்பம் அளித்தால் நான் ஒரு இலட்சம் அடிகளை மக்களுக்காக முன்னெடுத்துவைத்து நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பாரிய சேவையாற்றுவேன் என்றும் அவர் கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *