நீதிமன்றுக்கு அருகிலிருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு! – யாழ். நகரில் பதற்றம்
யாழ். சிறுவர் நீதிமன்றிற்கு அருகில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
யாழ். கொய்யாத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய விமலதாஸ் ஜோசப் ஜெபர்சன் என்பவரே சிறுவர் நீதிமன்றத்துக்கு அருகில் உள்ள வீட்டில் இருந்து சடலமாகப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.
கடற்றொழில் செய்யும் இவர், இந்த வீட்டுக்குச் சென்று அங்கு உறங்கிய உள்ள நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அந்தப் பகுதிக்குச் சென்ற நபர்கள் இவர் சடலமாகக் கிடப்பதைக் கண்டு யாழ். பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இந்தத் தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தை மீட்டதுடன் சடலம் தொடர்பான விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.