அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாண பௌத்த பீடங்கள் களத்தில்! – உடனடி நடவடிக்கைக்கு அஸ்கிரிய பீடம் வலியுறுத்து

அரசியல் ரீதியில் இன்று நாட்டில் அவதானிக்கக்க கூடிய விடயங்கள் மிகவும் வெறுக்கத்தக்கதாக உள்ளது. நாட்டில் இடம் பெற்றுவரும் சிக்கல் நிறைந்த அரசியல் கொந்தளிப்பு நிலைமைகளை துரிதமாக தீர்த்துவைப்பதே மிகவும் தேவையான ஒரு விடயம் என அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கத் தேரர் வண. வரகாகொட ஞானரத்ன இன்று தெரிவித்தார்.

பாராளுமன்ற அங்கத்தவர் நவீன் திசாநாயக்கா, ஹர்சன ராஜகருணா, மயந்த திசாநாயக்கா, ஹிரூனிகா பிரேமசந்திர உற்பட பொதுமக்கள் பலரும் இணைந்து மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களுக்குச்சென்று மகாநாயத் தேரர்களை சந்தித்து நாட்டு நிலைமை குறித்து கலந்துரையாடினர்.

அதன் போது அஸ்பகிரிய பீடத்தின் மகாநாயக்கத் தேரர் வண. வரகாகொட ஞானரத்ன தேரர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசியல் ரீதியில் இன்று நாட்டில் அவதானிக்கக்க கூடிய விடயங்கள் மிகவும் வெறுக்கத்தக்கதாக உள்ளது . மக்கள் பிரதிநிதிகள் தமக்குரிய பொறுப்பை மறந்து செயற்படுகின்றனர். இது பாரதூரமான விடயமாகும். இந்நிலைமை மாறவேண்டும் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *