மஹிந்த அணியின் நடிப்புக்கு ‘ஒஸ்கார் விருது’ – சஜித் பிரேமதாச பரிந்துரை!

சபையில் இன்று வாக்கெடுப்பு நடத்தாதலாலேயே நாடாளுமன்றத்தை முடக்கும் நடவடிக்கையில் மஹிந்த அணி இறங்கவில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாடாளுமன்றக் கட்டத்தொகுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துவெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்குமானால் அதை மஹிந்த தரப்பு உரிய வகையில் நிரூபித்திருக்கலாம். பெயர்கூவி வாக்கெடுப்பு நடத்துவதற்கு இணக்கம் வெளியிட்டிருக்கலாம். ஆட்சியமைப்பதற்குரிய ஆதரவு இல்லாததாலேயே சபை நடவடிக்கைகளை குழப்பியடித்தனர்.

இதனால் இலங்கையானது இன்று அனைத்துலக மட்டத்தில் கேலிக்கூத்தான நாடாக மாறியுள்ளது. ஜனநாயக நாடா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. மஹிந்த அணியினர் சிறப்பாக நடிக்கின்றனர். சினிமாவில் ஒஸ்காரி விருது வழங்கப்படுவதுபோல், அவர்களுக்கும் உயரிய விருது வழங்கப்படவேண்டும். காரணம், ‘அரசியல் நடிப்பு’ பிரமிக்கவைக்குமளவுக்கு அமைந்துள்ளது.

வாக்கெடுப்புக்கு அஞ்சியே கடந்தநாட்களில் நாடாளுமன்றத்தை மஹிந்தவும், அவரது சகாக்களும் வன்முறைக் களமாக்கினர். இன்று வாக்கெடுப்பு நடத்தாதாலேயே அமைதி காத்தனர். பெரும்பான்மை இல்லாவிட்டால் கௌரவமான முறையில், ஆட்சியை விட்டு வெளியேற வேண்டும்” என்றும் கூறினார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *