இன்று வந்த தைரியம் கருவுக்கு அன்று வராதது ஏன்?

சபாநாயகர் கருஜயசூரியவுக்கு இன்று ஏற்பட்டுள்ள  தைரியம் என்றே ஏற்பட்டிருந்தால் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ஆகியிருக்கலாம் என்றும், நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைக்கு அவரே முழுக்காரணம் என்றும் மஹிந்த அணி குற்றஞ்சாட்டியுள்ளது.

மஹிந்தவின் சகாக்களால் கொழும்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின்போது, சபாநாயகருக்கு எதிராக விமர்சனக் கணைகள் தொடுக்கப்பட்டுள்ளன.

இங்கு கருத்து வெளியிட்ட செயான் சேமசிங்க எம்.பி.,

” நாடாளுமன்றத்துக்குள் மோதல் வெடிக்கும். எனவே, வாக்கெடுப்பு நடத்தாமல் சபையை ஒத்திவைக்குமாறு சபாநாயகரிடம் நாம் கோரிக்கை விடுத்தோம். எனினும், அதை அவர் நிராகரித்துவிட்டார். படுகொலை இடம்பெறலாம் என குறிப்பிட்டிருந்தோம். அதையும் அவர் கண்டுகொள்ளவில்லை.

எனவே, சபாநாயகருக்கு எதிராக விசாரணை நடத்தப்படவேண்டும். அவர் அப்பதவியில் இருப்பதற்கு தகுரியுடையவரா என்று சிந்தித்து பார்க்கவேண்டும். புலம்பெயர் அமைப்புகளின் ஆலோசனைகளும் அவரை இயங்குகின்றன.

கருவுக்கு இன்று ஏற்பட்ட தைரியம் அன்று ஏற்பட்டிருந்தால் ஐ.தே.கவின் தலைவர் ஆகியிருக்கலாம்” என்றார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *