அமெரிக்க தலைவர்களை பாகிஸ்தான் முட்டாள்களாக எண்ணுகிறது- ட்ரம்ப் கடும் சீற்றம்
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் நடவடிக்கையில்லாததால் பாகிஸ்தானுக்கான் நிதியுதவி நிறுத்தப்பட்டு உள்ளது என பாக்ஸ் செய்தி சேனலுக்கான பேட்டியில் டிரம்ப் கூறினார்.

பாகிஸ்தானை எப்போது, தாங்கள் ஆதரித்து வந்ததாகவே கூறிய டிரம்ப், ஆனால் பாகிஸ்தான் தங்களுக்காக எந்த எதையும் செய்யாததால் நிதி உதவி நிறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி உள்ளதாவது:-
கடந்த 15 ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு 33 பில்லியன் டாலர்கள் உதவி அளித்ததில் அமெரிக்கா முட்டாள்தனமாக இருந்து உள்ளது. அவர்கள் எங்களுக்கு பொய் மற்றும் ஏமாற்றத்தை தவிர வேறொன்றையும்கொடுக்கவில்லை.நமது தலைவர்களை முட்டாள்களாக எண்ணுகிறார்கள்.ஆப்கானிஸ்தானில் நாம் வேட்டையாடும் தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடத்தைக் கொடுக்கிறார்கள். , சிறிய உதவியுடன் அவர்கள் நமக்கு செய்யவில்லை.என கூறி உள்ளார்.