இறுதி அஸ்திரத்தையும் சபாநாயகர் ஏவ வேண்டும் – உசுப்பேத்துகிறது ஐ.தே.க.!

நாட்டில் அரசியல் நெருக்கடி தலைதூக்கும் பட்சத்தில், ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களையும் சபாநாயகரால் பயன்படுத்தமுடியும். இதற்கான சட்டரீதியான ஏற்பாடுகள் குறித்து பிரதம நீதியரசரிடம், சபாநாயகர் விளக்கம் கோரலாம் – என்று ஐக்கிய தேசியக்கட்சி அறிவித்துள்ளது.


அலரிமாளிகையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துவெளியிடுகையிலேயே அக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரான வஜீர அபேவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“ அரசமைப்பினர் பிரகாரமே அரசியல் மாற்றங்கள் இடம்பெறவேண்டும். அவ்வாறு இடம்பெற்றிருந்தால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அலரிமாளிகையை விட்டுச்சென்றிருப்பார். சட்டத்தை உயிர்மூச்சாககொண்டு இயங்கும் நபர் அவர். 94 ஆம் ஆண்டிலும் அவர் இவ்வாறு செய்துள்ளார்.

சபாநாயகருக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. நாடாளுமன்றத்தின் உயரிய தன்மையை காக்கவே சபாநாயகர் பாடுபட்டார். அவரை பாராட்டவேண்டும்.

அரசியல் அமைப்புக்கு அமைய நாடு நெருக்கடி நிலையினை சந்தித்துள்ளது என சபாநாயகர் கருதுவாரானால், சபநாயகரக்குறிய அதிகாரங்களுடன் ஜனாதிபதியின் அதிகாரங்களையும் பிரயோகிப்பதற்கான அதிகாரம் சபாநாயகருக்கு வழங்கப்படுள்ளது.

நாட்டில் இக் கட்டான சூழ்நிலை உருவாகி 24 நாட்கள் ஆகியும் சபாநயகரின் அதிகாரங்களை முழுமையாக பயன்படுத்தாமல் இருப்பது கவலைக்குரியதாகும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *