Up Country

தலவாக்கலையில் அதிகாலையில் தீ விபத்து – இரண்டு கடைகள் தீக்கிரை

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை பிரதான நகரில் 16.11.2018 அன்று அதிகாலை 02 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கிரைண்டிங் மில் மற்றும் (பென்சி கடை) அழகு சாதான பொருட்கள் விற்பனை நிலையம் ஆகிய இரண்டு வியாபார நிலையங்கள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத் தீவிபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

பிரதேச பொது மக்கள், தலவாக்கலை பொலிஸார், தலவாக்கலை லிந்துலை நகர சபையினரின் தீயணைப்பு பிரிவினர் ஆகியோர் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். எனினும் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் மின்சார ஒழுக்கு காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

ஏற்பட்ட தீ காரணம் தொடர்பாகவும், சேதவிபரங்கள் தொடர்பாகவும் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

க.கிசாந்தன்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading