11 -11 இல் இலங்கையில் நடக்கப்போவது என்ன? 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட உற்பத்திப் பொருட்கள் – மிகப்பெரிய மலிவு விற்பனை தினம்!

முன்னணி ஈ-கொமர்ஸ் நிறுவனமான Daraz உலகின் மிகப் பெரிய மலிவு விற்பனைத் தினமான 11.11 ஐ இலங்கையில் முதல் முறையாக அறிமுகப்படுத்துகிறது.

இந்த ஒரு நாள் விற்பனைக்கு ரெக்கிட் பென்கிசர், யுனிலீவர், அங்கர், சம்சுன், அவிராட்டே, பிறவுன்ஸ் அன்ட் கம்பனி மற்றும் நிவ்யா என்பனவற்றுடன் குறுந்தகவல் பங்காளியாக ரக்குட்டென் வைபர் செயற்படுகின்றன.

இந்த மிகப் பெரிய முதலாவது நிகழ்வு Darazஅறிமுகமாகி, முதல் முறையாக இலங்கையில் இடம்பெறுகிறது.

இந்தத் தினத்தில், இதுவரை எதிர்பார்த்திராத மிகச் சிறந்த தனிப்பட்ட மலிவு விற்பனைகளையும், கழிவு நடவடிக்கைகளையும் வாடிக்கையாளர்களுக்குக் காணக்கூடியதாக இருக்கும். இலங்கையின் ஈ-கொமர்ஸ் தளத்தை புரட்சிகரமாக மாற்றக்கூடிய முதல் முறையாக செயற்படும் ஒரு நிகழ்வாக Daraz 11.11 அமையவிருக்கிறது.

11.11 என்றால் என்ன?

கறுப்பு வெள்ளிக்கு ஆசியாவின் மிகச் சிறந்த தெரிவாக Daraz இன் தாய் நிறுவனமான அலிபவா 2009 ஆம் ஆண்டில் 11.11 ஐ அறிமுகம் செய்திருந்தது. அதிலிருந்து 10 வருடங்களின் பின் 11.11 விற்பனை நிகழ்வை இலங்கையில் நடத்தவிருக்கிறது.

11.11 எப்போது அமைந்திருக்கிறது?

11.11 என்பது, நவம்பர் 11 என்பதன் குறுகிய பதமாகும். 2018 நவம்பர் 11 ஆம் திகதி இலங்கை மிகச் சிறந்த விற்பனையை திறந்த கைகளுடன், கொள்வனவுப் பொருட்களை இடும் தள்ளு வண்டிகளைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.

11.11 இல் விற்பனைக்கு வரவுள்ளது யாவை?

வாடிக்கையாளர்கள், தங்களுக்கென்றே தனிப்பட்ட ஒரு ஷொப்பிங் அனுபவத்தை எதிர்பார்க்கலாம். இதற்கு மேலதிகமாக, மிகப் பெரிய மெகா டீல்கள், பிளாஷ் சேல்கள், 100 க்கும் மேற்பட்ட வர்த்;தகப் பெயர் வவுச்சர்கள், பரிசுப் பெட்டிகள், வங்கிகளிடம் இருந்து வழங்கப்படும் விலைக் கழிவுகள், இலவச இணைப்புகள் மற்றும் மேலும் பல வெகுமதிகள் காத்திருக்கின்றன. இந்த விற்பனை தினத்தில் னுயசயண யிp ஆனது, இலங்கையின் மிகப் பெரிய ஈ-கொமர்ஸ் விற்பனைத் தளமாக செயற்பட உள்ளது.

Daraz 11.11 விற்பனையில், HSBC, கொமர்ஷல் வங்கி,ஸ்டான்டட் சாட்டட் மற்றும் செலான் வங்கியின் கடன் அட்டை உரிமையாளர்கள் மேலதிக விலைக்கழிவுகளைப் பெற்றுக்கொள்ள இருக்கிறனர். அவர்களுக்கு இந்தக் கடன் அட்டைகள் மூலம் மாதாந்தக் கொடுப்பனவுகளுக்கு வட்டி இல்லாத மீளச் செலுத்தும் வசதிகளும் பெற்றுக்கொள்ளப்பட இருக்கிறது.

Daraz ஸ்ரீலங்காவின் முகாமைத்துவப் பணிப்பாளர் பார்ட் வான் டிஜிக் எதிர்வரும் விற்பனை நிகழ்வு பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில்,

‘11.11 என்பது, இலங்கையின் ஈ-கொமர்ஸ் தொழிற்துறையை ஒரு புதிய பாதையில் இட்டுச்செல்ல இருக்கிறது. 11.11 இல் நீங்கள் னுயசயண யிp இனைப் பயன்படுத்தும் போது, அதற்கு முன் னுயசயண யிp இருந்த நிலையும், 11.11 க்குப் பின் னுயசயண இல் காணப்படும் நிலையும் வித்தியாசப்படுகின்றது என்று கூறுவீர்கள்.

இதன் மூலம் மாபெரும் மாற்றத்தை நாம் ஏற்படுத்த எதிர்பார்க்கின்றோம். 11.11 வெறுமனே விலைக் கழிவுகள் மற்றும் மலிவு விற்பனை மாத்திரமல்ல. இதன் மூலம் ஒட்டுமொத்த டிஜிட்டல் தொழிற்துறையும் ஒரே நிலைக்கு வரவுள்ளது. இதன் மூலம் செயற்கை அறிவினால் தனித்துவம் பெறக்கூடிய களியாட்ட நிகழ்வுகள், மிகப் பெரிய விலைக்கழிவுகள், பாதுகாப்பான கொடுப்பனவு முறைகள் என்பனவற்றோடு, 200,000 க்கும் மேற்பட்ட உற்பத்திகளை நீங்கள் இதில் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *