ரணிலை தூசனத்தால் திட்டிய வாசுவுக்கு தேசிய மொழிகள் அமைச்சுப் பதவி!
பிரதமர் மஹிந்தவிற்கு ஆதரவான முக்கிய உறுப்பினர்கள் சிலர் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
இவர்கள் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய பெரு நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சராக தினேஸ் குணவர்தனவும், தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம், மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சராக வாசுதேவ நாணயக்காரவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
கலாசார மற்றும் உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி பிரதி அமைச்சராக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினரான அசோக பிரியந்தவும், வெகுஜன ஊடக மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல்லவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
அ தேவேளை, பிரதராக ரணில் விக்கிரமசிங்க பதவி வகித்தபோது, நாடாளுமன்றத்தில் அவரை தூசனத்தால் திட்டிய வாசுவுக்கு தேசிய மொழிகள் அமைச்சு வழங்கப்பட்டுள்ளமை குறித்து சமூகவலைத்தளங்களில் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.