ஜோன் கீல்ஸ் பவுன்டேசனின் மர நடுகை கருத்திட்டம்- ஐந்து வருடங்களில் 3000 மரங்கள்
ஜோன் கீல்ஸ் பவுன்டேசன் நிறுவனத்தினால் டீ சிமோல் ஹோல்டர்ஸ் பக்ரீஸ் பிஎல்சி மற்றும் கார்பன் கன்சுயுலீட்டிங் கம்பனி (பிறைவட்) லிமிடட் நிறுவனங்களுடன் இணைந்து 2013ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட ஒரு மரநடுகைக் கருத்திட்டமாகுமானது, ஐந்து வருடங்களினுள் 3000 மரங்களை வளர்த்து பேணிப் பாதுகாத்துள்ளது.
இந்தக் கருத்திட்டத்தின் கீழ், 3000 பயிர்கள், காலி மாவட்டத்தில் 15.3 ஏக்கர்களை பூர்த்திசெய்யும் வகையில் ஹல்விட்டிகெல, கருபனவ, நெலுவ மற்றும் ஹின்கல்கொட பிரதேசங்களில் அமைந்துள்ள 31 தேயிலை சிறு உரிமையாளர் பண்ணை நிலங்களுக்கும் தேயிலை தொழிற்சாலை வளாகங்களுக்கும் விநியோகிக்கப்பட்டது.
இந்தக் கருத்திட்டத்தின் நோக்கம், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதேசத்தில் உள்ள தாவரப் பரப்பளவை மேம்படுத்துவதன் மூலம், சிறு உரிமையாளர்களின் வாழ்விடம் மற்றும் பல்லுயிரியலை பாதுகாக்கும் அதேவேளையில் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதாகும். இந்தக் கருத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள சிறுஉரிமையாளர்களுக்கு கருத்திட்ட காலத்தில் பயிர்களை பாராமரிப்பதுடன் பல்லுயிரியல் சேவைகளுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதன் மூலம் நன்மையளிக்கப்பட்டது.
இந்தக் கருத்திட்டத்திற்கான நிதி ஜோன் கீல்ஸ் பவுன்டேசன் நிறுவனத்தினால் பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார அபிவிருத்தி ஆகிய இரண்டையும் மேம்படுத்துவதற்கான முயற்சியாகவும் வழங்கப்பட்டதுடன், தேயிலை சிறுஉரிமையாளர் ஈடுபாடு மற்றும் பொது மேற்பார்வை ஊடாக டீ சிமோல் ஹோல்டர்ஸ் பக்ரீஸ் பிஎல்சி நிறுவனத்தின் முழு ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டது.
கார்பன் கன்சுயுலீட்டிங் கம்பனி (பிறைவட்) லிமிடட் நிறுவனம் 2014ம் ஆண்டிலிருந்து மரங்களை கண்காணிக்கின்றது. அதனது எட்டாவது கண்காணிப்பு விஜயம் 2018 பெப்பரவரியில் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சராசரி நிலைத்திருக்கும் வீதம் 98மூ வீதமாக அறிக்கையிடப்பட்டது. இறந்த மரங்களுக்காக புதிய மரங்களை நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்தக் கருத்திட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட லுனுமிதில்ல, ஹொரா, ஹல் மிலா, யக்காஹலுதுன் மற்றும் நேதுன் போன்ற காட்டு மரங்களுடன் விவசாயிகள் பழம் தரும் மரங்களான கொய்யா, கொக்கோ, நட்சத்திரப் பழம், தோடம்பழம் மற்றும் ரம்புட்டனான் போன்ற மரங்களை நட்டிருந்ததுடன், அவை பூத்துக்குலுங்கியதை அவதானிக்க முடிந்தது.
இந்தக் கருத்திட்டத்தின் நோக்கம் ஒப்பந்த நியதிகளின் கீழ் முடிவடைந்ததைத் தொடர்ந்து நிறைவு மாநாடு 28 செப்டெம்பர் 2018 ஜோன் கீல்ஸ் பவுன்டேசன் நிறுவனம், டீ சிமோல் ஹோல்டர்ஸ் பக்ரீஸ் பிஎல்சி நிறுவனம், கார்பன் கன்சுயுலீட்டிங் கம்பனி (பிறைவட்) லிமிடட் நிறுவனம் மற்றும் சிறு உரிமையாளர் சமூகத்தின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் நடைபெற்றது.
ஜோன் கீல்ஸ் பவுன்டேசன் நிறுவனத்தின் தொழிற்பாட்டுத் தலைவர், கூட்டிணைந்த சமூகப் பொறுப்பு, செல்வி கார்மலின் ஜயசூரிய அவையில் உரையாற்றுகையில் “
இந்த முன்னோடி நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குபற்றிய ஒவ்வொரு சிறு தோட்ட உரிமையாளர்களுக்கும் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கும் நன்றி தெரிவிப்பதற்கு ஜோன் கீல்ஸ் பவுன்டேசன் நிறுவனம் விரும்புகின்றது. இந்த முயற்சின் வெற்றியின் காரணமாக, காசுப் பயிர்களின் நன்மையைப் பெற்றுக்கொள்வதோடு,
அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் சிங்கராஜ மற்றும் கன்னெலிய மழைக் காடுகளின் உயிரியல் சூழலைப் பாதுகாப்பதற்கு ங்கள் பங்களிப்பை வழங்கியது தொடர்பாக நீங்கள் பெருமையடைய முடிவதுடன், இவை உங்களின் முயற்சி மற்றும் ஆர்வம் காரணமாக ஏற்பட்டதாகும். அத்துடன் இந்த துணை மரங்களை தொடர்ந்து பராமரிப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன், இதன் மூலம் எதிர்காலத்தில் நீங்களும் உங்கள் பிள்ளைகளும் கூற்றாடலையும் பொருளாதார நன்மைகளையும் மேம்படுத்திக்கொள்ள முடியும்.
இந்த முயற்சி தொடர்பாக பல சிறுதோட்ட உரிமையாளர்கள் தங்கள் பாராட்டுக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். இங்கு உரையாற்றிய நெலுவவைச் சேர்ந்த திருமதி பி நந்தாவதி கூறுகையில்
தற்போது தோட்டத்தில் பல வகையான பழ மரங்கள் கிடைக்கப்பெறுகின்றமையால் அதனை வீட்டுத் தேவைக்கு பயன்படுத்துவதுடன் கிராமத்து சந்தையில் விற்பதன் மூலம் மேலதிக வருமானத்தையும் பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார். நெலுவவைச் சேர்ந்த திரு. ஜயரத்ன கமகே உரையாற்றுகையில் புதிய மற்றும் போசணை மிக்க பயிர்களின் மூலம் நன்மைகளைப் பெற்றுக்கொள்வதனால் மேலதிக வருமானத்தைப் பெற்றுக்கொள்வதுடன், சுற்றாடலுக்கு வழங்கும் சூழலில் பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார்.
இந்த மாநாட்டில் கார்பன் கன்சுயுலீட்டிங் கம்பனி (பிறைவட்) லிமிடட் நிறுவனத்தின் கருத்திட்ட முன்னெற்றம் தொடாபான காட்சிப்படுத்தல் உள்ளடக்கப்பட்டிருந்ததுடன், நெலுவ, மதகம மற்றும் ஹல்விட்டிகல தேயிலை தொழிற்சாலை அத்தியட்சர்களினால் கருத்திட்ட கண்ணோட்டங்கள் வழங்கப்பட்டதுடன், ஹின்கல்கொட தோட்டத்தின் அட்தியட்சகர் நன்றியுரை வழங்கினார். இந்த நிகழ்வுக்கு டீ சிமோல் ஹோல்டர்ஸ் பக்ரீஸ் பிஎல்சி நிறுவனத்தின் சார்பாக, அந்த நிறுவனத்தின் தலைமைத் தொழிற்பாட்டாளர் திரு.ஹரிஷ் வனசிங்க பிரதிநிதித்துவம் வழங்கினார்.