மைத்திரியின் அதிரடி தொடர்கிறது – மேலும் சிலர் அமைச்சர்களாக பதவியேற்பு! நள்ளிரவு முதல் எரிபொருள் விலையும் குறைப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மேலும் சில அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்இது தொடர்பான நிகழ்வு  ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

நீர்ப்பாசனம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக துமிந்த திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். திறன்விருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சராக தயசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

அங்கஜன் இராமநாதன் மீண்டும் விவசாய பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.இளைஞர் ,மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக பியசேன கமகே  நியமிக்கப்பட்டுள்ளார்.

பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.லக்ஸ்மன் செனவிரத்ன பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாகாண சபைகள் , உள்ளுராட்சி மன்றம் மற்றும் விளையாட்டு துறை இராஜாங்க அமைச்சராக சிறியானி விஜயவிக்கிரம நியமிக்கப்பட்டுள்ளார்.கல்வி மற்றும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் மொகான் லால் கிரேறு நியமிக்கப்பட்டுள்ளார்.

வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சராக இந்திக பண்டார நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.தொழில் மற்றும் வெளிநாட்டுவேலைவாய்ப்பு பிரதி அமைச்சராக மனுஷ நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதி அமைச்சராக சாரதி துஷ்மந்த  நியமிக்கப்பட்டுள்ளார்.துறைமுகங்கள் மற்றும் துறைமுக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நிஷாந்த முத்துஹெட்டி ஹமகே நியமிக்கப்பட்டுள்ளார்.

மீள்குடியமர்வு, புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார்.

…………

எரிபொருள் விலை குறைப்பு

அதேவேளை, இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை,92 ஒக்டைன் பெற்றோல் வகைகள் 10 ரூபாவால் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி 92 ஒக்டைன் பெற்றோல் 155 ரூபாவில் இருந்த 145 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை டீசலின் விலை 7 ரூபாவினாலும் குறைக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே, டீசலின் புதிய விலை 123 ரூபாவில் இருந்து 116 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *