சபைக்குள் பிரதமருக்குரிய ஆசனம் மஹிந்தவுக்கு! சபாநாயகர் முடிவு!! – குழப்பத்தில் ஐ.தே.க. உறுப்பினர்கள்

நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி வரிசையில் பிரதமருக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஆசனத்தை மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தகவலொன்று வெளியாகியுள்ளது.

பிரதமராக மஹிந்தவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாலேயே சபாநாயகரால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரியவருகின்றது.

நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி பக்கத்தில், முன்வரிசையில் ஜனாதிபதிக்கு பக்கத்தில் பிரதமருக்குரிய ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்விரு ஆசனங்களிலும் வேறு எந்த உறுப்பினர்களும் அமர முடியாது. தவறுதலாக அமர்ந்தாலும் உடனடியாக எழும்புமாறு சபைக்கு தலைமை தாங்குபவர் உத்தரவிடுவார்.

அதேவேளை, அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளவர்களும் ஆளுங்கட்சியிலேயே அமர்வுள்ளார் என்றும், இதனால், ஐக்கிய தேசியக் கட்சி எதிரணிக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது என்றும் தெரியவருகின்றது.

எனினும், நாடாளுமன்றம் கூடிய பின்னர் பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்புக்கு ஆட்சியமைப்பதற்குரிய ஒப்புதல் வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *