முஸ்லீம் சமூககத்தினர் யதார்த்தமற்ற தலைவர்களால் இம்சிக்கப்படுகின்றனர்

முஸ்லீம் சமூககத்தினர் யதார்த்தமற்ற
தலைவர்களால் இம்சிக்கப்படுகின்றனர்

–  தேசிய காங்கிரஸ் அமைப்பாளர் நௌஷாட் காட்டம்

 

நாட்டில் யார் வந்தாலும் பெரும்யினத்தவரே ஜனாபதி! இப்படியான சூழ்நிலையில் முஸ்லிம் உரிமைகளை பேரம் பேசக்கூடிய பிடிமானம் சிக்கிய காலம் இது! இக் காலத்தில் ஏன் முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வாய்மூடி இருக்கின்றனர். உரிமைகளை அறிக்கைகளாக சமர்ப்பித்து பெறக்கூடிய சரியான தருணம் இதுவே – என தேசிய காங்கிரஸின் சம்மாந்துறை அமைப்பாளர் நௌஷாட் தெரிவித்தார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

இந்நாட்டில் வாழ்ந்துவரும் முஸ்லீம்கள் 10.5 வீதமானவர்கள் என எடுத்துக்கொண்டால் இந்நாட்டின் பெரும்பான்மையினர் 60 வீதத்திற்கும் அதிகமானவர்களாகவே இருக்கின்றனர். ஆகவே எமது சமூகத்திலிருந்து ஒருவர் இந்நாட்டின் ஜனாதிபதியாக இன்றைய சூழலில் வர முடியாது என்பது எதார்த்தமான விடயமாகும். எனவே எந்த சந்தர்ப்பத்திலும் இந்நாட்டில் ஒரு பெரும்பான்மையினத்தவரே ஜனாதிபதியாக வருவார். அப்படிஎன்றால் நாம் எவ்வாறு எமது உரிமை அபிலாசைகளை பெற்றுக்கொள்வது ? என்பதற்கான சரியான தெளிவினைத்தான் ஸ்தாபாகத்தலைவர் மர்ஹூம் எம்.ச்.எம். அஷ்ரப் எமக்கு கற்றும் செய்தும் காட்டினார்.

அதாவது, எமது சமூகத்திற்கான தலைவர்கள் சிந்திக்க வேண்டிய விடயம், அன்று எம்.ச்.எம். அஷ்ரப் எனும் ஒரு தனி ஆளுமையாக இந்தப்பெரும் பான்மை சக்திகளோடு பேரம் பேசியது. ஆனால் இன்று குறைந்தது முஸ்லீம்களின் தரப்பிலிருந்து மூன்று சக்திகள் பேரம் பேசும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. இருந்த போதிலும் அந்த தலைமை இந்த சமூகத்திற்கு பெற்றுக்கொடுத்ததில் பத்து வீதமானதையாவது இதுவரை செய்யவில்லை. மட்டுமன்றி அன்று எமது தலைவர் மக்களின் நலனுக்காகவும், உரிமை அபிலசைக்குமாகவே உழைத்தார் அதனால் பேரினவாத ஆட்சியாளர்களிடத்தில் எமது முஸ்லீம் மக்களுக்கு நல்ல பெயர் கிடைத்தது.

இவற்றையெல்லாம் கேட்டும் கண்டும் வந்த மக்களுக்கு இன்று இருக்கின்ற முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளின் தலைமைகள் ஆட்சியாளர்களுக்கு மத்தியில் சந்தேகத்தையும் கெட்ட பெயரையுமே பெற்றுக்கொடுத்துவிட்டு அவர்கள் நல்லவர்களாக தாங்களை அடையாளம் காட்டி அவர்களது அதிகாரத் தேவையினை நிறைவேற்றிக் கொள்கின்றனர் என்பது வரலாற்று உண்மை.

மு.கா. கட்சியின் ஸ்தாபகத் தலைவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோடு மிகவும் பரஸ்பர உறவினை ஏன் வைத்துக்கொண்டார்? அந்த உறவினை தனது கால கட்டத்தில் ஏன் ரனில் விரமசிங்கவோடு வைத்துக்கொள்ளவில்லை? எனும் கேள்விகளுக்கான உண்மை நம் எல்லோருக்கும் தெரியும் அதனால்தான் “ரனில் ஐக்கிய தேசியக் கட்சியில் தலைவராக இருக்கின்றவரை முஸ்லிம் காங்கிரஸ் பயணிக்காது” என்று கூறி சந்திரிக்கா அம்மையாரோடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் உறவினை தொடர்ந்தார்.

ஆனால் புதிய தலைவர் எமது ஸ்தாபாகத்தலைவரையும் அவரது வசியத்துகளையும் ஒதுக்கிவிட்டு அவரது தாய் கட்சியோடு இணைவதற்காக சந்திரிக்காவிடம் இந்த முஸ்லீம் சமூகத்தை கழுத்தறுக்கும் கூட்டமாக காட்டினார்.

இது மட்டுமன்றி, 2005ம் ஆண்டு மஹிந்த ரனில் தேர்தலில் ரணிலோடு நின்று மஹிந்த ஜனாதிபதியிடம் இந்த முஸ்லீம் சமூகத்தினை துரோகிகளாக காட்டிவிட்டு அவரது அமைச்சரவையில் அமைச்சராகவும் இணைந்து செயற்பட்டார்.

அது மட்டுமா?, 2010ம் ஆண்டு மஹிந்த ஜனாதிபதிக்கும் சாதத் பொன்சேகாவுக்கும் நடந்த தேர்தலில் மீண்டும் இந்த சமூகத்தினை மஹிந்த ஜனாதிபதிக்கு துரோகிகளாக காட்டிவிட்டு மீண்டும் அவரது அமைச்சரவையில் அமைச்சராக இணைந்து செயற்பட்டார்.

2015ம் ஆண்டில் மஹிந்த ஜனாதிபதிக்கும் பொது வேட்பாளர் மைத்திரிக்கும் நடந்த தேர்தலில் மிகத்தெளிவாக இந்த முஸ்லீம் சமூகத்தினை நன்றி கெட்டவர்களாக காட்டிக் கொடுத்துவிட்டு அதாவது “பாருங்கள் எனது சமூகம் எங்களை விட்டு விட்டு அங்கே சென்றுவிட்டார்கள் நாங்கள் என்ன செய்வது ” எனக் கூறிவிட்டு அதிலும் மைத்திரியுடன் இணைந்து கொண்டு அங்கும் அமைச்சராக இருந்தார்.

எனவேஇ இந்த நாட்டின் முஸ்லீம் சமூகமே சிந்தித்துப்பாருங்கள் நாமும் எமது மக்களும் பெரும்பான்மையினரிடத்தில் கெட்டவர்கள். ஆனால் எமது தலைவர்கள் அதே ஆட்சியாளர்களோடு ரோசம் இல்லாமல் அமைச்சர்களாக இருந்தனர்.

அ.இ.ம.கா. கட்சியின் தலைவர் மகிந்தவுடன் இருந்து கொண்டு அவரது தேசியப்பட்டியல் பா.உ. எடுத்துக் கொண்டு முஸ்லீம் சமூகத்திற்கு முனாபிக் எனும் பட்டத்தினை எடுத்துக் கொடுத்துவிட்டு வெளியேறினார். நல்லகாலம் எல்லா முஸ்லீம்களும் முனாபிக் என்று சொல்லவில்லை. அப்படியான வார்த்தைப் பிரயோகம் அவர் பாவிக்காமைக்கு ஒரேயொரு கரணம் அதாஉல்லாஹ் மாத்திரமே ஏனனில் அவர் நம்பிக்கையாளனாக இருந்து காட்டினார்.

எனவே, இவ்வாறான தலைவர்களால் பெரும்பாண்மை ஆட்சியாளர்களுக்கு மத்தியில் மேலும் மேலும் இழிவுபடுத்தப்பட்டு வருவதால் அந்த ஆட்சியாளர்கள் முஸ்லீம்கள் மீது பாய நினைக்கின்றனர்.

ஆகவே இன்று இந்தச்சூழலில் நாமும் நமது தலைமைகளும் சீரான முறையில் சிந்தித்து எவர் ஆட்சி செய்தாலும் அவர்களோடு முஸ்லிம் சமூகத்தின் ஆள்புல மற்றும் நிலபுலங்களை மீட்டெடுத்து பாதுகாக்கும் வண்ணம் எமது சமூகத்தின் உரிமைகளை ஆட்சியாளர்களோடு பேரம்பேசி சாத்தியமான வழிகளை கையாளவேண்டிய தருணம் இப்போது நிலவுகின்றது. ஏன் தமிழ் மக்களின் நலனுக்காக ஒரு இலக்கோடு பயணிக்கும் TNA தலைவர் சம்மந்தன் கூட பல பிரேரணைகள் அடங்கிய முன்மொளிவோடு இரண்டு தரப்பினரோடும் பேசும் நோக்கில் இன்று பிரதமர் மஹிந்தயோடு பேசிக்கொண்டிருக்கிறார். அவரது முன்மொழிவினை அவர் விளியிடுவதாகவும் பகிரங்கமாக கூறியிருக்கிறார்.

ஆனால் எமது சமூகத்திற்காக உருவாக்கப்பட்ட மு.கா. கட்சியும் அதற்கு பிரதியீடாக உருவாக்கப்பட்ட அ.இ.ம.கா. கட்சியும் இந்த சமூகத்திற்காக அதன் பிரதான தேவைகள் அடங்கிய கோரிக்கைகளோடு பேசவேண்டிய இந்த சந்தர்ப்பத்திலும் எதார்த்தமற்ற சிந்தனைகளாலும், தீர்க்கதரிசனமற்ற சாமர்த்தியம் இல்லாத முடிவுகளாலும் ஆட்சியாளர்களிடம் இந்த சமூகத்தினை மலினப்படுத்துகின்ற அதேவேளை அதனை சுயலாபங்களுக்காக அவர்களுக்கு விரும்பிய கட்சிகளோடு பயணித்து முஸ்லீம் தேசியத்தை தடம் தெரியாமல் அழிக்க இன்று ரணிலோடு இணைந்து செல்வதாக அறிவிக்கின்றனர்.

எனவே, இவ்வாறான தலைமைகளை தூக்கி எறிந்துவிட்டு சரியான சந்தர்ப்பத்தில் சரியான முடிவினை எடுக்கும் ஆத்மார்த்த தலைவரான அதாஉல்லாஹ் அவர்களை பின்தொடராவிட்டால் நமது அடுத்த தலைமுறையின் இருப்பும் சுயநிர்ணயமும் கேள்விக்குயாக மாறும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *