நிதி மற்றும் பொருளாதாரம் மஹிந்த வசம் – புதிய அமைச்சரவை பதவியேற்பு!

12 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் இருவரும் இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன  முன்னிலையில் பதவியேற்றனர்.

இதன்படி பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் நிதி மற்றும் பொருளாதாரம் போன்ற முக்கிய அமைச்சுகள் கையளிக்கப்பட்டுள்ளன. அத்துடன், தொண்டமான், திகாம்பரம் ஆகியோரும் அமைச்சரவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

புதிய அமைச்சரவை – இராஜாங்க – பிரதியமைச்சர்கள் விபரம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ –  நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சர்

2)மஹிந்த அமரவீர  – விவசாய அமைச்சர்

3)நிமல் சிறிபாலடி சில்வா – போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்

4)ஆறுமுகன் தொண்டமான்  – மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர்

5)டக்ளஸ் தேவானந்தா –  மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர்

6)கலாநிதி சரத் அமுனுகம – வௌிவிவகார அமைச்சர்

7)மஹிந்த சமரசிங்க – துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர்

8)ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய – மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர்

9)விஜேதாஸ ராஜபக்ஸ – கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர்

10)விஜித் விஜயமுனி சொய்சா – மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்

11)பைசர் முஸ்தபா  –  உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்

12)வசந்த சேனாநாயக்க – சுற்றுலா மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர்

13)வடிவேல் சுரேஷ் –  பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்

14)ஆனந்த அளுத்கமகே – சுற்றுலா மற்றும் வனஜீவராசிகள் பிரதியமைச்சர்

 

அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் தனியாட்சி அமையும் பட்சத்தில் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30ஐயும், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் எண்ணிக்கை 45 ஐ விஞ்சுதலாகாது என கூறப்பட்டுள்ளது. தேசிய அரசு அமையும் பட்சத்தில் நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் தொகையை அதிகரிக்க முடியும். அதற்கும் வரையறை இருக்கின்றது.

எனவே, அடுத்துவரும் நாட்களிலும் அமைச்சரவை நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *