பதம் பார்க்கும் முகா., அ.இ.ம.கா!!

பதம் பார்க்கும் முகா., அ.இ.ம.கா!!
முடிவின் வெளிப்பாடு அடக்கமா? அதிகாரமா?

ஜனாதிபதியின் அதிர்ச்சி வைத்தியத்தால் அதிர்ந்து போய் இருக்கின்ற இலங்கையின் அரசியல் தற்போது பரபரப்புக்கு மத்தியில் பல வியாக்கியாணங்களை கக்கிக் கொண்டிருக்கின்றது. ஆட்சிக் கதிரையை யார் அலங்கரிப்பது என்கின்ற ஆசைச் சமர், அந்தஸ்து பதவியெல்லாம் மறந்து படபட வென்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கின்றது.

இது மட்டுமா! வெள்ளியன்று சிவப்புக் காய்க்கு குறிவைத்து ஆடத்தை ஆரம்பித்த அரசன் இரவோடிரவாக கொடுக்கும் அதிர்ச்சிகள் ‘கோட்சூட்’ ஐ பல கோணங்களிலும்; கொதிக்கி வைக்கின்றார். ஆஹா! அருமையான நாட்டில் அழகான அமைப்பில் இரு பிரதமர். இதுவும் ஒரு வரலாறுதான் இலங்கைக்கு.

இவை பொதுப் படையானது, பொதுவாகக் கூறின் விரைவகாக மங்கிவிடும். ஆனால், மாணிடத்தின் மகுடங்களையெல்லாம் இலகுவாக மாற்றிட இலயாது. அதையும் மாற்றிட இலங்கையின் அரசியல் சட்டத்தில் இடமுண்டோ என்பதும் நிச்சயமற்றது. உண்மையிலே உலக நாடுகளின் வல்லரசு அமெரிக்கா ஜனாதிபதிக்கும் இல்லாத எதேச் அதிகாரம் அதாவது நிறைவேற்று அதிகாரம் இலங்கை ஜனாதிபதிக்கு உண்டு என்பதை இந்த பிரதமர் நியமனம் தெளிவாக உணர்த்துகின்றது.

1978 முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தண வகுத்த வியூகம் இன்றைய ஜனாதிபதிக்கு பாணுக்கு பூசுகின்ற ஜேம் போன்று இனிப்பாகிவிட்டது.
தற்போதைய சூழ்நிலையை எடுத்துப் பார்த்தால், சட்டத்தின் பிரகாரம் ஒருவரும், அதிகாரத்தின் ஆவேசத்தால் இன்னொருவரும் முட்டி மோதுகின்றனர். ஆனால் இருப்பதோ ஒரு ஆசனம் நாடு என்ன செய்யும்!.

சரி! இது இப்படியே இருக்க,
எமது முஸ்லிம் தலைமைகளின் முடிவுகள் குறித்து அலசுவோமா!?
அதவது பெரும்பாண்மையினரால் இரு புறமும் தளம்பிக் கொண்டிருக்கின்ற பிரமதர் பதவியானது, சிறுபாண்மையின் கரங்கலிலேயே சிக்கியுள்ளது. ‘கெச்ச பிடி, கெச்ச பிடி’ என்கின்ற கதைதான் இதுவும்.

எமது சமூகத்தின் குரலாக ஒலிக்க வேண்டிய இரண்டு கட்சிகளும் தற்போது பெறுமதியான நேரங்களில் உள்ளன என்பதும் யாவரும் அறிந்ததே! இருந்த போதிலும் இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதா? அல்லது சமூகத்திற்காக சாறு பிளிவதா? என்ற நிலைப்பாட்டுக்கு இரு தலைவர்களும் நேரம் எடுத்து சிந்திக்கின்றனர்.

மு.கா. மற்றும் அ.இ.ம.க தலைவர்கள் இருவரும் பகிகரங்கமாக நேற்று ஐ.தே.காவுக்கே ஆதரவு வழங்கப் போவதாக கருத்து வெளியிட்டிருந்த போதிலும், பல தடவைகள் பிரதமர் மஹிந்தவுடன் உரையாடியுள்ளதாகவும் தகவல்கள் கசிகின்றன.
இப்படியான நிலைமையில் தீர்மாணிக்கும் சக்தியாக சிறுபாண்மையிருந்தும், தமிழ்த் தேசிய கூட்டமைபப்பின் வாகனத் தொடரணியில் சிக்கனல் போட்டுவோமே! என்ற ஒரு எண்ணப்பாடும் இவர்களுக்கு உள்ளதாம்.

இதற்கிடையில் நேற்று காலை முதல் கடுகடுப்பான நிலைமையில் உயர்பீடக் கூட்டங்கைள கூட்டி கலந்தோசித்து வருகின்ற இரு தலைவர்களும் இதுவரையில் எவ்வித முடிவும் எட்டப்படாமலேதான் தங்களது கூட்டங்களை நிறைவு செய்துள்ளனர்.
‘இது மதில் மேல் பூனை’யின் கதையாகவே உள்ளது. அவ்வாறு முடிவுகள் எட்டாத கூட்டங்கள் இன்னும் வளர்கிறது. ஆனால் வலுப்பெற்ற முடிவுகள் எதுவுமே வலுக்கவில்லை.

இந்த சந்தர்ப்பத்தில் கேட்காத உரிமைகளும், வைக்காத கோரிக்கைகளும் இனி எப்போதுதன் கிடைக்கும். கிடைத்ததை சந்தரப்பத்தை சரியாக வியூகம் வகுத்தால் சாணயக்கியமாக சாதிக்க வாய்ப்புள்ளது.

யார் பிரதமரானாலும் முஸ்லிகளுக்கு நடந்தவை, நடப்பவை நாடறிந்த விடயம்தானே! அவற்றை பட்டிலிடத் தேவையில்லை. இருந்த போதிலும் சற்று ஒப்பீட்டளவில் நோக்கினால்,

மஹிந்த ஆட்சியில் அளுத்கம – ரணில் ஆட்சியில் திகன முதல் அம்பாறை
மஹிந்த ஆட்சியில் விலை சுட்டென் – ரணில் ஆட்சியில் விலைச் சூத்திரம்

இவ்வாறு அடுக்கடுக்காய் கூறலாம். ஆனால் இதிலொரு ஒற்றுமைவரும் என்னவென்றால், நாம் எதை எடுத்தாலும் அவை, இரண்டு ஆட்சிகளிலும் தெளிவாக அரங்கேறிய நாடகமாகத்தான் இருக்கும். அப்படியானால் இரண்டுமே ஒரு குட்டைக்குள் ஊறிய மட்டைகள்.

அதையும் தாண்டி நோக்கினால்,

மஹிந்த ஆட்சியில் அபிவிருத்தி – ரணிலின் ஆட்சியில் ஒப்பந்தங்கள்
மஹிந்த ஆட்சியில் தொழில் வாய்ப்பு – ரணில் ஆட்சியில் திறைசேறியில் பணிமின்மை
மஹிந்த ஆட்சியில் கொள்ளையென்றால், ரணிலின் ஆட்சியின் பிணைமுறி மோசடி
இது போன்று பலதும் சொல்லலாம்…

ஆனால், அன்று அளுத்கமையால் அதிருப்தியுற்ற முஸ்லிம்கள் அமைதிக்கும், நிம்மதிக்குமாக தெரிவு செய்து ஆணை கொடுத்த நல்லாட்சிNலுதான் பேரிணவாதம் அம்பாரை முதல் திகன வரை தலையெடுத்தது.

அது மட்டுமா? வட்டமடு தொட்டு வில்பத்து வரையிலும் காணிப் பிரச்சினை இன்னும் வலுக்கிறது இந் நல்லாட்சியில்!. விலைவாசி கழுத்துகளை நசுக்கின்றது. இப்படி எண்ணிலடங்கா குறைபாடுகள். இப்படியான ஒரு சூழ்நிலையில் மக்கள் பலர் இந் நல்லாட்சியில் அதிருப்தி கொண்டுள்ளமையும் தற்கால நிலைப்பாடு.

இவற்றையெல்லாம் வைத்து நோக்கினால் இது மக்கள் வாக்களிக்கும் தேர்தல் காலமென்றால் நம் தலைமைகள் இந் நேரம் முடிவெடுத்திருப்பார்கள் எப்படி தெரியுமா?
பெருமளவு மக்கள் மாற்றம் விளங்கியிருக்கும் உடனே தங்கள் அரசியல் நுணுக்கங்களை ஆராய்ந்து மக்களுக்கவே இந்த முடிவு நாங்கள் இவரை ஆதரிக்கின்றோம் என்றிருப்பார்கள். (உதாரணம்: 2015 ஜனாதிபதித் தேர்தல்)

ஆனால், தற்போது முடிவெடுப்பது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கு இவர்களுக்கு ஏன் தெரியுமா? தராசு எந்தப் பக்கம் கதிக்கும் என்பது நிச்சயமில்லை.
உச்சி முதல் உள்ளங்களால் வரை ஒரே பதட்டமாக இருக்கும் எம் தலைவர்கள் உயர்பீடத்தை கூட்டிக் கலைத்தே! களைத்து விடுவார்கள் போலும்.

சரி! இது ஒரு பக்கம் இருக்க,
இன்னொரு விடயம்தான் தனிப்பட்ட ரீதியாக சில எம்பிக்களுடன் பிரதமர் மஹிந்த உரையாடுவதான தகவல். சில வேளை தலைமையை மீறிய ஆதரவுக்கும் வாய்ப்புக்கள் அதிகம். இப்படி பல தில்லுமுல்லுகள் எமது முஸ்லிம் அரசியலுக்குள் இருந்த போதிலும், இங்கு ஒரு விடயத்தை நாம் சிந்திக்க வேண்டும். இரு முஸ்லிம் கட்சிகளும் ஒன்றித்து ஒரு பக்கம் நிற்கையில்,

மஹிந்த ராஜபக்ஸவுடன் கைர்கோர்த்த தருணத்தில் ரணில் விக்கிரமசிங்க பிரதமரானால் முஸ்லிம்களின் நிலை என்ன?

மாறாக, ரணில் விக்கிரமசிங்கவுடன் கைகோரத்தவுடன் மஹிந்த ராஜபக்ஸ பிரதமரானால் முஸ்லிம்களின் நிலை என்ன?

இது சாதாரன விடயமல்ல. ஆட்சி மாற்றத்தில் எமது இருப்புக்களின் அத்திவாரமும் இன்றியமையாதனவை.

அது மாத்திரமல்ல இவ்விரு கட்சிகளும் இருவரில் யாரை பிரதமராக ஆதரித்தாலும் வலு கோரிக்கைகளை கோர வேண்டிய தருணம் இதுவே!.
இது சமூகத்தின் இருப்புக்கு வலுச் சேர்க்க முஸ்லிம் தலைமைகளுக்கு இறைவன் கொடுத்துள்ள வரம்.

  • – மனம் வைத்தால் உரிமை வெல்லும்
  • – பணத்துக்கு கைவிரித்தால் சொகுதான் மிஞ்சும்.

 

-கியாஸ் ஏ. புஹாரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *