வெளிநாட்டு பயணிகளுக்கு இலங்கையால் விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்!

வெளிநாடுகளிலிருந்து இலங்கை வரும் சகல பயணிகளும், மிகவும் அவதானத்துடன் நடந்துகொள்ளுமாறு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இயங்கும் இலங்கை சுங்கப் பிரிவு, எச்சரிக்கை விடுத்துள்ளது.


வெளிநாடுகளிலிருந்து தகுந்த சான்றிதழ்களைப் பெறாமல், சட்டவிரோதமான முறையில் விமானங்கள் மூலம் எடுத்து வரப்படும் எந்தவொரு பொருளும் விமான நிலையத்தில் வைத்து பறிமுதல் செய்யப்படும்.

தாவர வகைகள், பழ வகைகள், இறைச்சி வகைகள் மற்றும் விலங்குகள் என்பனவற்றை, நாட்டுக்குள் கொண்டு வரும்போது, அவற்றைக் கொள்வனவு செய்த நாடுகளில், அதற்காகப் பெற்றுக்கொள்ளப்பட்ட தெளிவாக்கல் சான்றிதழ்கள் அவசியம். அவ்வாறில்லாமல் எடுத்து வரப்படும் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.

அவற்றை, விவசாயத் திணைக்கள  அதிகாரிகளிடம் ஒப்படைத்ததன் பின்னர், அந்த அதிகாரிகள்  அவற்றைத் தரம் பிரித்து அழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று, இலங்கை சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களை, வெளிநாட்டு நோய்த் தொற்றுகள் மற்றும் கிருமிகளின் தாக்கங்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கிலேயே இத்தகைய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கையில் நடைமுறையிலுள்ள சட்ட திட்டங்களுக்கு அமைவாக, இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் தரத்தைப் பரிசோதனைக்கு உட்படுத்த முடியும் என்றும்,  சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *