இலங்கையை பந்தாடிய இங்கிலாந்து; ஏமாற்றத்துடன் வெளியேறிய ரசிகர்கள்

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்கப்பட்ட இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ரி-20 பேட்டியில் இங்கிலாந்து அணி 30 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.போட்டியின் ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து, இலங்கை அணியின் பந்துவீச்சுக்களை பதம் பார்த்துக்கொண்டிந்த தருணத்தில் பிடியெடுப்புக்களை இலங்கை அணியினர் நழுவ விட்டது இன்னும் பலம் சேர்த்தது.

மழையின் குறுக்கீட்டால் இடைநிறுத்தப்பட்டு மீண்டும் போட்டி ஆரம்பிக்கப்பட்டதும் இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் வீழத்தொடங்கின. அதனடிப்படையில் 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 187 ஓட்டங்களை பெற்றது. அதிகபட்சமாக ஜேஸன் ரோய் 36 பந்தில் 69 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் லசித் மலிங்க மற்றும் அமில அபன்சோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். சவாலான 188 என்ற இலக்கினை விரட்ட களமிறங்கிய இலங்கை அணியின் முதலிரண்டு விக்கெட்டுகளும் 16 ஓட்டங்களுக்குள் வீழ்ந்தது. தொடரந்து சந்திமல் மற்றும் தனஞ்சயடி சில்வா ஜோடி 33 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்டவேளை 3 வது விக்கெட்டும் வீழ்தப்பட்டது.

அணித்தலைவர் திசார பெரேரா 31 பந்துகளில் 6 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 57 ஓட்டங்களை பெற்றார். அறிமுக வீரர் கமிந்து மென்டிஸ் 24 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்..இறுதியில் இலங்கை அணி 157 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 30 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

பந்து வீச்சில் ஜோயி டென்லி 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் ஆதில் ரஷீத் 11 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். போட்டியின் ஆட்ட நாயகனாக 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜோயி டென்லி தேர்வு செய்ய பட்டார்.

இலங்கை அணியினர் ரீ-20 தரவரிசையில் 9ம் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *