வீட்டுக்குள் முடங்கியிருந்த சிராந்தியும் வெளியேவந்து ஆட்டத்தை ஆரம்பித்தார்!
மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்போது முதல்பெண்மணியான வலம்வந்த சிராந்தி ராஜபக்ச, ஆட்சிமாற்றத்தின்பின்னர் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்தார்.
தனது கணவர் ஜனாதிபதியாக இருந்தபோது தனக்கென தனியான ஊடகப்பிரிவு, அடுக்குப்பாதுகாப்பு, வாகன அணிவகுப்பு என அனைத்து அதிசொகுசு வாழ்க்கையை அவர் வாழ்ந்தார். மஹிந்தவுடன் பிரதான நிகழ்வுகளில் பங்கேற்பதுடன், வெளிநாட்டு விஜயங்களிலும் கலந்துசிறப்பிப்பார்.
எனினும், ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த தோல்வியடைந்த பின்னர், சிராந்தியின் ஆடம்பர வாழ்வும் முடிவுக்கு வந்தது. சாதாரண பெண்மணியாக வீட்டுக்குள் முடங்கியிருந்தார். இலஞ்ச, ஊழல் தடுப்பு விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டபோது, அரசியல்வாதிபோல் படைபட்டாளத்தோடு வந்துநின்றார்.
தற்போது மஹிந்தவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் கண்டிக்கு பயணம் மேற்கொண்டு மதவழிபாடுகளில் அவர் ஈடுபட்டார். பழையபடி சிராந்தியும் களமிறங்கியுள்ளார்.