பள்ளிக்குள் புகுந்து பெண் வெறியாட்டம்! 14 மாணவர்கள்மீது வெட்டு!!
மத்திய சீனாவின் சோங்கிங் பகுதியில் உள்ள யுடோன் நியூ செஞ்சுரி மழலையர் பள்ளி ஒன்றில் பெண் ஒருவர் சமையலறையில் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் 14 குழந்தைகள் காயம் அடைந்து உள்ளனர்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட குழந்தைகள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சம்பவம் நடந்த பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டு உள்ளனர்.