தீபவளிக்கு முன்னர் சர்கார்?

இளைய தளபதி விஜய் நடித்த சர்கார் திரைப்படம் தீபாவளிக்கு முன்னர் வெளிவரவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி நடித்துள்ள சர்கார் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் தீபாவளியன்று (06.11.2018) வெளிவருதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், தற்போது தீபாவளிக்கு முன்னதாகவே வெளிவரும் என்று தெரிகிறது.

செவ்வாய்க்கிழமையில் படத்தை வெளியிட யாரும் விரும்ப மாட்டார்கள். அதனால் அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையான நவம்பர் 2ஆம் திகதியே படத்தை வெளியிட தயாரிப்பு தரப்பு முடிவு செய்திருக்கிறது.

2ஆம் திகதி வெளியிடப்பட்டால் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் ஆரம்ப வைபவம் இருக்கும். அதற்கடுத்து இருப்பது ஒரே ஒரு திங்கட்கிழமை, அதை தாண்டிவிட்டால் மறுநாள் தீபாவளி அதைத் தொடர்ந்து அந்த வாரம் முழுமைக்கும் படத்தை கொண்டு சென்று விடலாம். படம் எப்படி இருந்தாலும் 10 நாள் ‘கலெக்ஷனை’ அள்ளிவிடலாம். அது படத்தின் ‘பட்ஜட்டை’ மீட்டுக் கொடுத்து விடும் என்று தயாரிப்பு தரப்பும், படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும் நம்புகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *