மலையகத்தில் எட்டு திக்கிலும் கோலோச்சிகிறது தொழிலாளர் புரட்சி! – புலியாவத்தையிலும் திரண்டது ஊழியர் படை!

ஆயிரம் ரூபா சம்பள உயர்வை உடனடியாக வழங்குமாறு வலியுறுத்தி அட்டன் – டிக்கோயா, புலியாவத்தை நகரில் இன்று (18) பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


கருப்பு பட்டியனித்து போராட்டக்களம் புகுந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், உரிமைக் குரலை விண்ணதிர முழங்கச்செய்தனர்.

புலியாவத்தை நகரிலிருந்து காலை 9 மணிக்கு பேரணியை ஆரம்பித்த தொழிலாளர்கள், பட்டல்கல சந்திக்குசென்ற பின்னர் போராட்ட வடிவை மாற்றினர்.

தோட்டத்தை நடத்த முடியாவிட்டால் கம்பனிகள் வெளியேற உடன் வேண்டும், கூட்டுஒப்பந்தம் இரத்து செய்யப்படவேண்டும், ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வேண்டும் என்றெல்லாம் கோஷங்கள் எழுப்பட்டன.

இதனால் போடைஸ் டயகம, சாஞ்சிமலை, பகுதிகளுக்கான போக்குவரத்தும் ஒருமணிநேரம் ஸதம்பிதமடைந்தது.

இப்போராட்டத்துக்கு நோர்வூட் பிரதேச சபையின் தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்களும் ஆதரவை வெளியிடும் வகையில் கருப்பு பட்டியுடன் களம் புகுந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *