உலக முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஹிஸ்புல்லாஹ்வுக்கு கௌரவிப்பு
உலக முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை பாராட்டி கௌரவிக்கும் மாபெரும் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் எதிர்வரும் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மேற்படி நிகழ்வு நடைபெறவுள்ளது.
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உலக முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் மக்காவில் நடைபெற்று வருகின்ற அதன் 43ஆவது அதியுயர் சபை பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
இதனை வரவேற்கும் வகையில் காத்தான்குடி பொது மக்களால் குறித்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.