பெண்கள் விரும்பமில்லையெனில் ஆண்கள் வரமாட்டார்கள்! – சின்மயியை சீண்டுகிறார் ஆண்ரியா

பெண்கள் படுக்கையை பகிர விரும்பவில்லை என்றால், யாரும் அவர்களிடம் எதுவும் கேட்கமாட்டார்கள் என்று நடிகை ஆண்ட்ரியா கூறியுள்ளார்.

கடந்த சில வாரங்களாக சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்படுவது மீ டு. தமிழ் சினிமாவின் பின்னணிப் பாடகியான சின்மயி, கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார் என்று பல அடுக்கடுக்கான புகார்களை கொடுத்துள்ளார்.

சின்மயியைத் தொடர்ந்து பல நடிகைகளும், பாலியல் ரீதியாக பாதிப்பிற்குள்ளானோம் என்று கூறி வருகின்றனர். உதாரணமாக நடிகை அமலா பால், வரலட்சுமி சரத்குமார், தனுஸ்ரீ தத்தா, அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் உள்பட பலரும் இது தொடர்பாக தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

மனதில் பட்டதை அப்படியே கூறும் ஆண்ட்ரியா, கமல் ஹாசனின் விஸ்வரூபம் -02 படத்தில் நடித்திருந்தார். தற்போது வடசென்னை படத்தில் அமீரின் (ராஜன்) மனைவி சந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், இது குறித்து நடிகை ஆண்ட்ரியா கூறுகையில், எனக்கு இது போன்ற ஒரு அனுபவம் இல்லை. நான் ஒருவருடன் உலாவிக் (Dating) கொண்டிருக்கிறேன் என்றால், எனக்கு அவனை பிடித்திருந்தது.
அதே போன்று தான் அவனுக்கும். நான் ஒரு நடிகை. அதனால், யாரெல்லாம், படுக்கையில் இல்லை என்பது எனக்கு தெரியும். இதெல்லாம், இருவருக்கும் இடைப்பட்ட விஷய்ம். படுக்கையை பகிர்வது ஆண்களது குற்றம் மட்டுமல்ல. ஆனால், இதில் நாம் மற்றவர்களை குற்றம்சாட்டுகிறோம். தங்களது வேலைக்காக பெண்கள் படுக்கையை பகிரவிரும்பவில்லை என்றால், யாரும் அவர்களை கேட்கமாட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *