தமிழரசுக்கட்சிக்கு ‘செக்’ – வடக்கில் உதயமாகிறது புதுக்கட்சி!

இலங்கைத் தமிழரசுக்கட்சிமீது கடும் அதிருப்தியில் இருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கேஸ்வரன், புதிய அரசியல் கட்சியொன்றை விரைவில் ஆரம்பிப்பதற்கு தயாராகிவரும் நிலையில் – அதற்கு முன்னரே வடக்கில் புதிய கட்சியொன்று உதயமாகவுள்ளது.


வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையிலேயே இக்கட்சி உதயமாகவுள்ளது என்றும், இதற்கான ஆரம்பக்கட்ட பேச்சுகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது என்றும் அறியமுடிகின்றது.

புதிய சமஷ்டிக் கட்சி, ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் உள்ளிட்ட மேலும் சில பெயர்கள் புதிய கட்சிக்கு முன்மொழியப்பட்டுள்ளன. மாகாணசபைத் தேர்தல் கலைக்கப்பட்ட பின்னர் இது குறித்த அறிவிப்பு உத்தியோகப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காணாமல்போனவர்களின் உறவினர்கள், தமிழரசுக்கட்சியின் அதிருப்திக்குழுவினர் உட்பட மேலும் சிலரின் ஆதரவுடனேயே அனந்தியின் புதுபயணம் ஆரம்பமாகவுள்ளது. காலப்போக்கில் இக்கட்சிக்கு முதல்வர் விக்கேஸ்வரன் தலைமை வகிப்பதற்குரிய அறிகுறிகளும் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அனந்தியின் இந்த முடிவின் பின்னால் விக்கி தலைமையிலான குழுவினரே இருப்பதாக மற்றுமொரு தகவலும் வெளியாகியுள்ளது.

விக்கியால் அண்மையில் அறவிக்கப்பட்ட நான்கு தேர்வுகளில் , புதுக்கட்சி ஆரம்பித்தல் என்பதும் ஒரு தேர்வாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *