‘அவரை’ சந்தித்த ‘இவர்’ யார்?

பாதுகாப்பு அமைச்சில் உயர்பதவியை வகித்த அவர், தேசிய முக்கியத்துவமிக்க தேர்தலொன்றில் முக்கிய வேட்பாளராகக் களமிறங்குவதற்கு தயாராகிவருகிறார்.


அவருக்கான வெற்றிவாய்ப்பு பிரகாசமாக தென்படுவதாக நினைக்கும் அரசியல் பிரமுகர்கள் சிலர், அவரை இரகசியமாக சந்தித்து – தமது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் சிலர் உறுதிப்படுத்திவருகின்றனர்.

இந்நிலையில் மலையகத்திலுள்ள முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவரும், மூடிய அறைக்குள் பேச்சு நடத்தியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

ஏற்பாடுகள் அனைத்து வெற்றிகரமாக முடிவடைந்தப்பின்னர் இறுதிநேரத்தில் ‘பல்டி’யடிப்பதற்கு தயார் என்ற உத்தரவாதமும் இதன்போது வழங்கப்பட்டதாம்.
யார் அந்த அரசியல்வாதி என்ற வினாவுக்கு விடையறிய உங்கள் மனம் துடிப்பதை எம்மாலும் உணரமுடிகின்றது.

அவர் யாரென சொன்னால் அவரின் ஆதரவாளர்கள் பழனிக்கு பால்காவடி எடுக்கக்கூடும். மேலும் சிலர் அறுபடைவீட்டைநோக்கி புறப்படக்கூடும். எல்லாம் அந்த முறுகனுக்கே வெளிச்சம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *