உலகெங்கும் பெருகிவரும் புற்றுநோய்! இவ்வருடம் மட்டும் 96 இலட்சம் பேர் பலி!!

உலகளவில் இரண்டாவது உயிர்க்கொல்லி நோயாக புற்றுநோய் உருவெடுத்திருக்கின்றது. இந்த ஆண்டில் மட்டும் புற்றுநோய்க்கு 96 இலட்சம் பேர் பலியாகி உள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு கோடியே 80 இலட்சம் பேர் புதிதாக புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர் எனவும் சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

21ஆம் நூற்றாண்டில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் நோயாக புற்றுநோய் அமைந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாழ்நாளில் 5 ஆண்களுக்கு ஒருவரும், 6 பெண்களுக்கு ஒரு பெண்ணும் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகுவார்கள் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வயது முதிர்ச்சி, உடல் ஆரோக்கிய பாதிப்பு, இன்றைய வாழ்க்கை சூழல் போன்றவை புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கின்றன.

புகைப்பழக்கத்தை கைவிடுவது, முறையாக உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உணவு வகைகளை சாப்பிடுவது போன்றவை புற்றுநோய் அபாயத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.

பிராக்கோலி, பீன்ஸ், கேரட், பெர்ரிஸ், சிட்ரஸ் பழங்கள், மஞ்சள், தக்காளி, இஞ்சி, மீன், ஆலிவ் ஆயில், லவங்கப்பட்டை போன்றவை புற்றுநோயை காக்கும் உணவுகளாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *