‘பேஸ்புக்’கிலிருந்து 3 கோடி பேரின் தகவல்கள் திருட்டு!
பேஸ்புக் கணக்கில் இருந்து 3 கோடி பேரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது.
சமூக வலைத்தளமான பேஸ்புக் பயனாளர்களின் கணக்குகளில் பெரியஅளவு பாதுகாப்பு குறைபாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் 5கோடி பேரின் கணக்குகள் ‘ஹேக்’ செய்யப்பட்டு தகவல்கள் திருடப்பட்டுள்ளன..

இந்த பாதிப்பை சந்தித்துள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என பேஸ்புக் நிறுவனம் கூறியிருந்தது. இந்நிலையில் மீண்டும் 3 பேரின் தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இலங்கையிலும் பெரும்பாலானவர்கள் முகநூல் பயன்படுத்துகின்றனர். பாதுகாப்பான முறையில் ‘பாஸ்வேட்’ கட்டமைப்பை மாற்றியமைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
சிலர் பிறந்த வருடம், திகதி, மாதம் ஆகியவற்றையும், மேலும் சிலர் தேசிய அடையாள அட்டை இலக்கங்களையும், பெயரையுமே ‘பாஸ்வேட்களாகப்பயன்படுத்துகின்றனர். சிலர் தொலைபேசி இலக்கத்தையும் பயன்படுத்துகின்றனர். இது ஆபத்தாகும்.