ஒலுவிலை அழிக்காதே! எங்களைக் காப்பாற்று!! – அம்பாறையில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்

அம்பாறை – ஒலுவில் துறைமுகத்தில் மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதனால், ஒலுவில் பிரதேசத்துக்கு ஏற்படப் கூடிய பாதிப்புகளை தடுத்து நிறுத்துமாறு கோரி, நேற்று மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

ஒலுவில் சந்தை சதுக்கத்தில் ஆரம்பமான குறித்த பேரணி, பிரதான வீதி ஊடாக, கடந்த 7 நாட்களாகத் துறைமுக பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் போராட்டம் முன்னெடுக்கப்படும் இடத்தைச் சென்றடைந்தது. அங்கு அனைவரும் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒலுவில் அனைத்து பள்ளிவாசல் சம்மேளனம், சமூக சேவை நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்புப் போரட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

ஒலுவிலை அழிக்காதே, அரசே எங்களின் கோரிக்கைகளுக்கு செவிமடு, பாரபட்சம் காட்டாதே, எங்களைக் காப்பாற்று போன்ற சுலோபங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *