சிறுவர் தினத்தையொட்டி 13 இல் விசேட நிகழ்வு – அமானா வங்கி ஏற்பாடு!

உலகச் சிறுவர் தினத்தை முன்னிட்டு, அமானா வங்கி அதன் சிறுவர் சேமிப்புக் கணக்குரிமையாளர்களுக்கு நாள் முழுவதும் மகிழ்ந்து விளையாடுவதற்கென விசேட நிகழ்வொன்றினை 2018 ஒக்டோபர் 13ஆம் திகதி மு.ப. 9.00 மணி தொடக்கம் பி.ப. 4.00 மணி வரை கொழும்பிலுள்ள சத்துட்டு உயனவில் (கொழும்பு 15) ஏற்பாடு செய்துள்ளது.

தத்தமது பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் இவ்விழாவுக்கு வரும் ஒவ்வொரு பிள்ளைக்கும் jet ride, dodgem car, twister, air swing, pirate ship, lady bird ride, cup and saucer ride, bouncer castle  போன்றவற்றில் இலவசமாகச் சவாரி செய்யும் வாய்ப்பு வழங்கப்படும்.

அவற்றைத் தவிர, சிறுவர்கள் குதூகலமாகப் பங்குபற்றிப் பரிசுகளையும் வெல்லக்கூடிய பல்வேறு விநோத விளையாட்டுகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. பதிவுகள் மட்டுப்படுத்தப்பட்டதனால், இந்த விழாவில் தம் பிள்ளைகளை பங்குபற்ற விரும்பும் பெற்றோர் 011 7 756 756 என்ற வங்கியின் துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்துப் முன்கூட்டியே பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

வங்கியின் தனியாருக்கான வங்கியலுவல் மற்றும் சந்தைப்படுத்தலுக்குப் பொறுப்பான உப தலைவர் சித்தீக் அக்பர் இவ்விழா பற்றித் தெரிவிக்கையில்,

“சேமிக்கும் பழக்கத்தில் ஈடுபட்டுள்ள சிறுவர்களினதும் அவர்களின் சிறப்பான எதிர்காலத்திற்காக நல்லதைச் செய்யும் பெற்றோருக்கும் நன்மையளிக்கும் விதத்தில் இவ்விழாவை நடத்துவது குறித்து நாம் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று கூறினார்.

சிறு வயதிலிருந்தே பிள்ளைகள் மத்தியில் சேமிக்கும் பழக்கத்தைப் பேணிவளர்ப்பதற்கு அமானா வங்கியின் சிறுவர் சேமிப்புக் கணக்கு ஒரு சிறந்த வழியாகும். இக் கணக்கின் மூலம் சிறுவர்களுக்கு பல்வேறு சன்மானங்கள் வழங்கப்படுவதோடு தற்போது பிரபல்யம் அடைந்துள்ள “உங்கள் மீதியை அதிகரியுங்கள்”

(Grow Your Balance) ஊக்குவிப்பு ஊடாக கணக்கு மீதியை அதிகரிக்கும் பிள்ளைகள் ரூ.5,000 முதல் ரூ.100,000 வரை அதிகரித்து பெறுமதியான ஐந்து வெ வ்வேறு அன்பளிப்புக்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அது மாத்திரமன்றி, புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு உறுதியான நிதி அத்திவாரத்தை வழங்கும் பொருட்டு மற்றுமொரு திட்டமாக ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.500 வைப்புச் செய்யப்பட்ட சிறுவர் சேமிப்புக் கணக்கை அமானா வங்கி அன்பளிப்புச் செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *