சவூதியில் முதன்முறையாக வங்கித் தலைவராக பெண் நியமனம்

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன. முகம், உடல் தெரியாத அளவுக்கு ஆடைகள் அணிதல், கார் ஓட்டத் தடை, விளையாட்டுப் போட்டிகளை நேரடியாகப் பார்க்கத் தடை, சினிமா பார்க்கத் தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் பெண்களுக்கு இருந்தன.

ஆனால், சவுதி அரேபியின் இளவரசர் வந்த முகம்மது பின் சல்மான் ஆட்சிக்குப் பின் பல்வேறு புதிய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இவர் சமீபத்தில் பெண்கள் கார் ஓட்டுவதற்கும், ஓட்டுநர் உரிமம் பெற்றுக்கொள்ளவும் அனுமதி அளித்தார். அதுமட்டுமல்லாமல், பெண்கள் திரையரங்குகளில் சென்று சினிமா பார்க்கவும் அவர் அனுமதித்தார்.

சவுதி அரேபியாவில் முதல் முறையாக வங்கியின் தலைவராக பிரபல பெண் தொழில் அதிபர் லுப்னா, அல் ஓலயன் நியமிக்கப்பட்டுள்ளார். சவுதி அரேபியாவில் இயங்கும் சவுதி பிரிட்டிஷ் வங்கி மற்றும் அலவ்வால் வங்கியும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் மிகப்பெரிய 3-வது வங்கியாக உருவெடுத்துள்ளது.

இந்த வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள லுப்னா அல் ஓலயன் அமெரிக்காவில் மேற்படிப்பு முடித்தார். போர்பஸ் இதழின் மத்திய கிழக்கு நாடுகளில் 2018-ம் ஆண்டு ஆதிக்கம் நிறைந்த பெண்களுக்கான பட்டியலில் முதல் இடத்தை பெற்றிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *