கைதான விநாயகத்துக்காக காலில்விழுந்த கணேசன் படை
ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானின் தந்தையும், தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவருமான முத்து விநாயகம் தொண்டமான் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
ஆவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக பொலிஸார் அழைத்துவந்தவேளை, கைவிலங்கிடப்பட்ட காட்சியை படம்பிடிக்க வேண்டாமென அங்கு திரண்டிருந்த ஊடகவியலாளர்களிடம், குழுவொன்று மிரட்டல்பாணியில் கோரிக்கை விடுத்ததாம்.
சேவல்காரர்களுடன் கூட்டணி வைத்துள்ள – கொழும்பை மையப்படுத்தி இயங்கும் கட்சியொன்றின் தலைவரின் சகாக்களே இந்நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்தக் கட்சியின் தலைவர் யார் என்பது பிரமச்சரியத்துக்கு பேர்போன அந்த கணேசனுக்கே வெளிச்சம்.
அதேவேளை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஆரம்பத்தில் கூட்டரசுக்கு ஆதரவளிக்காத நிலையில் அக்கட்சி உறுப்பினரொருவரின் தந்தை, தேசிய கால்நடை அபிவிருத்தி அதிகார சபையில் உயர் பதவி வகித்தமை குறித்து முகநூலில் பலகோணங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.