தினமும் இரவில் கட்டிப்பிடிப்பார் – இயக்குநர்மீது இளம் நடிகை பாலியல் புகார்!

குயீன் பட இயக்குனர் மீது பாலியல் முறைப்பாட்டை முன்வைத்துள்ளார் நடிகை கங்கனா ரனாவத்.

விகாஸ் பெஹல் இயக்கத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்த குயீன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. தனுஸ்ரீ தத்தா விவகாரம் பெரிதாகியுள்ள நிலையில் விகாஸ் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார் கங்கனா.

இது குறித்து கங்கனா ரனாவத் கூறியதாவது,

நான் குயீன் படத்தில் நடித்தபோது விகாஸ் பெஹல் திருமணமானவர் என்றாலும் தினமும் ஒரு பெண்ணுடன் உறவு கொள்வது பற்றி பெருமையாக பேசுவார். நான் மற்றவர்களை பற்றி கருத்து கூறுபவள் அல்ல. ஆனால் ஒருவர் செக்ஸுக்கு அடிமையாக இருந்தால் அதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். அவர் தினமும் இரவு பார்ட்டி பண்ணுவார்.

இரவில் நான் சீக்கிரம் தூங்கச் செல்வதை கிண்டல் செய்வார் விகாஸ். நான் அவரை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் என்னை இறுக்கமாக கட்டிப் பிடித்து என் தலைமுடியின் வாசத்தை நுகர்வார். மேலும் என் கழுத்தில் அவர் முகத்தை புதைப்பார். என் பலத்தை எல்லாம் பயன்படுத்தி அவர் பிடியில் இருந்து வெளியே வருவேன்.

உன் வாசம் எனக்கு பிடிக்கும் கே என்று விகாஸ் என்னிடம் கூறுவார். அவரிடம் ஏதோ சரியில்லை என்பது மட்டும் எனக்கு தெரியும். விகாஸ் மீது முன்பு பாலியல் புகார் தெரிவித்த பெண்ணுக்கு நான் ஆதரவு தெரிவித்தேன். அந்த நேரம் அவர் ஹரியானாவில் தங்க பதக்கம் வாங்கிய பெண் பற்றிய படத்தை இயக்கும் ஸ்க்ரிப்டுடன் என்னிடம் வந்தார். நான் அந்த பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்ததால் என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.

நல்ல கதை கைவிட்டு போனதில் எனக்கு கவலை இல்லை. எனக்கு எது சரி என்று பட்டதோ அதையே செய்தேன். அந்த சம்பவத்தை அப்படியே மூடி மறைத்துவிட்டார்கள். அந்த பெண்ணுக்கு அப்போதே நான் ஆதரவு தெரிவித்தேன். ஹாலிவுட் போன்று பாலியல் புகார்கள் தெரிவிக்கும் #MeToo இயக்கம் இந்தியாவிலும் துவங்கும் என்று நான் நினைத்தது தவறு என்கிறார் கங்கனா ரனாவத்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *