‘செல்பி’மோகத்தால் 250 இற்கும் மேற்பட்டோர் பலி!

ஆபத்தான இடங்களில், தன்னைத் தானே புகைப்படம் (செல்பி) எடுக்கும் போது, விபத்து ஏற்பட்டு – கடந்த ஆறுவருடங்களில் உலகலாவிய ரீதியில் 250 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்று ஆய்வின்மூலம் தெரியவந்துள்ளது.


இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தால் நடத்தப்பட்ட ஆய்விலேயே இவ்விடயம் தெரியவந்துள்ளது. இதில் 10 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உயரமான மலைப்பகுதி, ஆபத்தான மிருகங்களுக்கு அருகில், ஓடும் ரயில் உட்பட ஆபத்துமிக்க சந்தர்ப்பங்களின்போது செல்பி எடுக்கமுற்பட்டவர்களுக்கே இறுதியில் உயிரைவிட நேர்ந்துள்ளது.

உயரமான மலை, இடம் மற்றும் ஆபத்தான இடங்களில் சென்று செல்பி எடுப்பதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தங்களை பிரபலப்படுத்தவே இப்படி செய்கின்றனர். அப்படி செல்பி எடுப்பது, சில சமயங்களில் ஆபத்தில் முடிவதும் உண்டு.

எனவே, விநோதனம் என்பது உ யிரை பறிப்பதாக அமையக்கூடாது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *