“நச்சுதன்மையற்ற நாடு” இடை நிறுத்தினால் பூகம்பம் வெடிக்கும் – “செமா” அரிடம் அதிரடி கோரிக்கை

“நச்சுதன்மையற்ற நாடு”

இடை நிறுத்தினால் பூகம்பம் வெடிக்கும் –

“செமா”  – அரிடம் அதிரடி கோரிக்கை

=================================
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வெற்றிநடை போட்டுவந்த “நச்சுதன்மையற்ற நாடு” செயற்றிட்டம் இம் மாதம் 16 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றமையானது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் நிலையை எட்டுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.

“நச்சுத்தன்மையற்ற நாடு”- தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதானி மூலோபாய தொழில்முயற்சி முகாமைத்துவ நிறுவனம் (செமா) சற்றுமுன்னர் அறிவித்திருந்த ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளமையானது,

“நச்சுத்தன்மையற்ற நாடு”- தேசிய நிகழ்ச்சித்திட்டம் 2018 ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி நிறைவுக்கு வருகின்றது. நாட்டின் உயர் அதிகாரிகளால் தீர்மானிக்கப்பட்டு மூலோபாய தொழில்முயற்சி முகாமைத்துவ நிறுவனத்திற்கு (செமா) அறிவித்திருந்தது.

தற்கால நல்லாட்சி அரசினது மிகவும் சிறப்பமிக்க மக்கள்மயமானதும் மனிதத்துவமிக்கதுமான பேண்தகு கருத்திட்டமான நச்சுத்தன்மையற்ற நாடு- தேசிய நிகழ்ச்சித்திட்டம் அவ்வாறான சந்தர்ப்பத்தில் உடனடியாக நிறுத்தப்பட்டது குறித்து உண்மையாக நாட்டின் பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் தேசிய அநியாயாயமாகும்.
ஜனாதிபதி அவர்களால் உருவாக்கப்பட்டு மிகவும் உன்னதமான மக்களினது ஆராக்கியத்திற்கான பூமியில் விதைக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டமான இது பிழையான நிர்வாகத்தினால் ஏற்பட்ட சதிச்செயலால் மக்களின் நிதி வீணடிக்கப்பட்டது மட்டுமல்லாமல் அதற்காக எடுக்கப்பட்ட திடிர் முடிவானது ஒருவகையில் நியாயமானதே.

என்றாலும், மூலோபாய தொழில்முயற்சி முகாமைத்துவ நிறுவனத்தின் மேலாளரது நிர்வாக திறமையின்மையும் நாட்டின் பொது மக்களது நலனோம்புகைக்கு அவ்வாறான தடை ஏற்படுமாயின் அது துரதிஸ்டம் எனலாம். இதனால் சிறப்பமிக்க மக்கள்மயப்படுத்தப்பட்ட இக்கருத்திட்டமானது நச்சுத்தன்மையற்ற நாடு தேசிய நிகழ்ச்சித்திட்டம் முடிவுறுத்தப்படுவதானது நாட்டு மக்களுக்குரிய சிறப்புரிமைக்கான சந்தர்ப்பம் அதனூடு கொல்லப்படுவதாகும்..
அதன்பிரகாரம், நிறுவனத்தில் சரியான நிர்வாகத்தை ஏற்படுத்தி அந்த உண்மையான மனிதாபிமானமிக்க நச்சுத்தன்மையற்ற நாடு கருத்திட்டத்தை நிறுத்தாது புதிய நிர்வாகத்துடன் ஆரம்பிக்குமாறு மிகவும் ஐக்கியத்தின் பெயரில் கொளரவத்துடன்  ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கின்றோம்.” – என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த இத் திட்டம் அண்மைக்காலமாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இவ்வாறு நிறுத்தம் செய்யப்படும் தீர்மானமானது பல்வேறு விமேசனங்களுக்கு மத்தியில் விமர்சனங்களை எதிர்கொள்ளும் மாபியாகவே கருதமுடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *