போர்க்குற்றங்களுக்கு மைத்திரியே பொறுப்பு – புதுக்கதை சொல்கிறார் விமல்!
போர்க்குற்றச்சாட்டுகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறுப்புக்கூறவேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல்வீரவன்ஸ நேற்று வலியுறுத்தியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக் ஷ தலைமையிலான எளிய அமைப்பின் கருத்தரங்கில் கலந்துகொடு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
“ இறுதிக்கப்பட்டப்போரின்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக் ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக் ஷ, இராணுவத்தளபதியாக இருந்த பொன்சேகா ஆகியோர் நாட்டைவிட்டு தப்பியோடினர் என்றும், இறுதி இரண்டு வாரங்களுக்கு போருக்கு தானே தலைமை வழங்கினார் என்றும் தற்போதைய ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

போரின் இறுதி இரண்டுவாரங்களில்தான் போர்க்குற்றச்சாட்டுகள் நடந்தன என்று மேற்குலக நாடுகளால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே, இறுதி இரண்டு வாரங்களுக்கு உரிமைகோரும் ஜனாதிபதி, போர்க்குற்றச்சாட்டுகளுக்கும் பொறுப்புக்கூறவேண்டும். அவ்வாறுகூறி படையினரை காப்பாற்ற வேண்டும்” என்றும் விமல் குறிப்பிட்டார்.